புடின்
புடின்pt web

ட்ரம்பிற்கே கல்தா கொடுத்த புதின்.. நடைமுறையை மீறி பேசினாரா.. என்ன நடந்தது?

அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான சந்திப்பின்போது ரஷ்ய அதிபர் புடின் நடைமுறையை மீறியது பேசு பொருளாகியுள்ளது.
Published on

உலக நாடுகள் உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான வரலாற்று சந்திப்பு பல்வேறு முக்கியத்துவங்களை பெற்றிருக்கிறது. அதில், சில நிகழ்வுகள் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, ட்ரம்ப் முன்னிலையில் நடைபெற்ற கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நடைமுறையை (PROTOCOL) மீறி முதலாவதாகவே உரையாற்றினார். 2018க்குப் பிறகு அமெரிக்க அதிபருடன் புடின் பங்கேற்ற முதல் சந்திப்பு இதுவாகும். உக்ரைன் போர் தொடர்பாக அமைதி ஒப்பந்தம் எதுவும் கையொப்பமிடப்படாத நிலையிலும், இருவரது சந்திப்பு உலக அரங்கில் பெரும் அரசியல் சிக்னலாக கருதப்படுகிறது.

பொதுவாக, கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்புகளில் அமெரிக்க அதிபரே முதலில் உரையாற்றுவார். ஆனால், இம்முறை புடின் மைக்கைப் பிடித்து பேசத் தொடங்கினார். அலாஸ்கா சந்திப்பின் கதை தன்னுடைய விதிப்படி தொடங்க வேண்டும் என்பதுபோல, கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டதாக பார்க்கப்படுகிறது.

புடின்
சென்னையில் பரவலாக மழை.. இரவு 7 மணி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

உக்ரைன் போருக்கான ரஷ்யாவின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தாமல் புடின் மேலோட்டமான வார்த்தைகளில் பேசினார். அதேவேளையில், அமெரிக்கா - ரஷ்யா உறவுகள் புவியியல் மற்றும் வரலாற்று பிணைப்புகள் என்று சித்தரித்தார். குறிப்பாக, அலாஸ்கா ஒருகாலத்தில் ரஷ்யாவுக்குச் சொந்தமான பகுதி என்பதை நினைவூட்டியும், அமெரிக்கா மற்றும் ரஷ்யா எதிரிகள் அல்ல, புவியியல் ரீதியில் அண்டை நாடுகள் என்று வலியுறுத்தியும் புடின் உரையாற்றினார்.

தங்களுக்குள் நேரடி சந்திப்பு மிகவும் தாமதமாகிவிட்டது என்று குறிப்பிட்ட ரஷ்ய அதிபர் புடின், இப்போது டிரம்ப் உடன் தமக்கு நல்ல நேரடி தொடர்பு உள்ளது என்று தனது உரையில் குறிப்பிட்டார். அலாஸ்கா சந்திப்பின் மூலம், டிரம்ப் - புடின் உறவு அடுத்தகட்டத்தில் உலக சக்திவாய்ந்த அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புடின்
திராட்சைகளுக்கான 8% வரி நீக்கம்.. இந்தியா இங்கிலாந்து ஒப்பந்தத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com