தமிழ்நாடு
சென்னையில் பரவலாக மழை.. இரவு 7 மணி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. அதோடு, நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், சென்னையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.