படை வீரர்களை அதிகரிக்க திட்டம்... பெண்கள் 8 குழந்தைகளைப் பெறவேண்டும்.. ரஷ்யா அதிரடி

ரஷ்ய ராணுவம் தனது படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது.
ரஷ்யா
ரஷ்யாட்விட்டர்

நேட்டோ படைகளின் விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது. பல்வேறு படிநிலைகளில் ராணுவத்திற்கு புதிய வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் க்ரெம்ளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதுள்ள சூழலில் ராணுவத்தில் பணியாற்ற விரும்புவோர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆணையில் அதிபர் விளாடிமிர் புடின் கையொப்பமிட்டார். ராணுவத்தில் சுமார் ஒரு லட்சத்து 70ஆயிரம் பேர் புதிதாக சேர்க்கப்படுவர் எனவும், இதன்மூலம் ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கை 13 லட்சத்து 20ஆயிரமாக அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது

ரஷ்யா
ரஷ்யா

ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஃபின்லாந்து அண்மையில் நேட்டோவுடன் இணைந்துள்ளது. சுவீடனும் நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ளது. உக்ரைனும் விரைவில் நேட்டோவில் இணையக்கூடும். எல்லையில் கூட்டுப்படைகளின் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதாகக் கூறும் ரஷ்யா, படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தவிர்க்க இயலாத ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க: அதிகரித்த கருக்கலைப்புகளால் குறைந்த மக்கள் தொகை; கவலையில் ரஷ்யா! தடுக்க மறைமுக நடவடிக்கைகள் தீவிரம்!

முன்னதாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரஷ்ய மக்கள் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய புதின், ”நம் முன்னோர்கள் 4 - 5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டு, வலுவான தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தது. நமது மூதாதையர்கள் 8 அல்லது அதற்கு மேலான குழந்தைகளை பெற்றெடுத்தனர் என்பதை ரஷ்ய குடும்பங்கள் நினைவில்கொள்ள வேண்டும். இந்த சிறந்த மரபுகளைப் பாதுகாக்க வேண்டும்.

மீண்டும் புத்துயிர் பெற செய்ய வேண்டும். பெரிய குடும்பங்கள் என்பது ஒரு விதியாக மாற வேண்டும். அனைத்து ரஷ்ய மக்களுக்கும் ஒரு வாழ்க்கை முறையாக இது அமைய வேண்டும். குடும்பம் என்பது நமது நாடு மற்றும் சமூகத்திற்கான அடித்தளம் மட்டும் இல்லை. இது ஒரு ஆன்மிக நிகழ்வு மட்டும் இன்றி ஒழுக்கத்தின் ஆதாரமாகவும் உள்ளது. வரும் தசாப்தங்கள், அடுத்துள்ள தலைமுறையினருக்கு ரஷ்யாவின் மக்கள்தொகையை பாதுகாப்பதும் அதிகரிப்பதும் இலக்காக இருக்க வேண்டும்.

எனவே தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக நாட்டின் மக்கள்தொகையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு ஆகும். இந்த மரபை நினைவில்கொண்டு இன்றைய இளம் தலைமுறை பெண்களும் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று, குறைந்து வரும் ரஷ்ய மக்கள் தொகையை அதிகரிக்க தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் மக்கள்தொகை குறைந்து வருகிறது. இது ஒருபக்கம் என்றால் போர் உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஷ்யாவில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பலியாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: ’அடுத்த பெண்ணைப் பார்ப்பியா..’ - அமெரிக்காவில் காதலனின் கண்ணில் ஊசியால் குத்திய காதலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com