உலகை கலங்க வைத்த குட்டி குரங்கு 'PUNCH'.. தாய் நிராகரித்தது ஏன்? Zoo காப்பாளர் சொன்ன முக்கிய தகவல்!
Punch என்ற macaque குரங்கு, தாயால் கைவிடப்பட்டதால், ஜப்பானின் Ichikawa உயிரியல் பூங்காவில் Orangutan பொம்மையுடன் தனிமையை ஈடு செய்தது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி, மனிதர்களின் தனிமை மற்றும் அரவணைப்பின் அவசியத்தை வெளிப்படுத்துகிறது.
கடந்த சில நாட்களாக Punch என பெயரிடப்பட்ட macaque வகை குரங்கு தான் இணையத்தில் எல்லோரையும் ஆட்கொண்டு வருகிறது.. கடந்த ஜனவரி மாதம் தனது கூட்டத்தை விட்டு பிரிந்து தனியாக சென்ற பென்குயின் எல்லோருடைய மனதையும் உலுக்கியதை போல, தற்போது இந்த Punch-ம் அனைவருடைய மனதையும் உலுக்கியுள்ளது.
ஜப்பான் நாட்டிலுள்ள Ichikawa நகர உயிரியல் பூங்காவில், தனது தாயால் கைவிடப்பட்ட Punch என பெயரிடப்பட்ட Macaque வகை குரங்கு தனிமையில் தவித்து வந்ததையெடுத்து, உயிரியல் பூங்கா நிர்வாகம் அதற்கு Orangutan குரங்கு பொம்மையை கொடுத்து அதன் தனிமையை ஈடு செய்தது. இது இணையத்தில் பென்குயின் வைரலானதை போன்று படு வைரலானது.
இந்த இரண்டு விஷயத்திலும் பொதுவானதாக இணையவாசிகளால் பார்க்கப்படுவது, தனிமை மற்றும் தனித்துவம் தான். கூட்டத்தை விட்டு மலையின் உச்சத்தை நோக்கி செல்லும் பெங்குயின் ஒரு பக்கம் என்றால் தனது தாயால் கைவிடப்பட்டாலும் தனக்கென ஒரு உலகத்தை உருவாக்கி கொள்ளும் Punch மறுபக்கம் என தங்கள் வாழ்வுடன் ஒத்து பார்க்கும் அளவிற்கு இரண்டு சம்பவங்களும் மனிதர்களின் மனதிற்கு நெருக்கமாகியுள்ளது.
தாய் PUNCH-ஐ நிராகரித்தது ஏன்..?
ஜப்பானின் Ichikawa நகர உயிரியல் பூங்காவில் தாயால் கைவிடப்பட்ட Punch என்ற 7 மாத ஜப்பானிய macaque குரங்குக்கு, காப்பாளர் கொசுகே ஷிகானோ(Kosuke Shikano) தான் Orangutan பொம்மையைக் கொடுத்துப் பாதுகாத்து வருகிறார். அந்த பொம்மை, Punch குரங்கு மற்ற குரங்குகளுடன் மீண்டும் இணையவும், மன அமைதி மற்றும் பாதுகாப்பாக உணரவும் உதவும் என்று ஷிகானோ நம்புகிறார்.
ஆரம்பத்தில் இந்த பொம்மையுடன் அதிக நேரம் செலவழித்தாலும், Punch காலப்போக்கில் மற்ற குரங்குகளுடன் இணைந்து கொள்ளும் என்றும், அந்தப் பொம்மையின் உதவி கூடி விரைவில் Punch-க்கு தேவைப்படாத காலம் வரும் என்றும் அவர் கூறுகிறார்.
மேலும், முதல்முறை தாயான அந்த Macaque வகை குரங்கு அதாவது Punch-ன் தாய், கடுமையான கோடை வெப்ப காலத்தில் Punch-ஐ பெற்றெடுத்த காரணத்தால் அதற்கு மன அழுத்தம் ஏற்பட்டு குட்டியைப் புறக்கணித்திருக்கலாம் என்று காப்பாளர்கள் கருதுகின்றனர்.
தற்போது Punch குரங்கு Orangutan பொம்மையுடன் விளையாடுவதும், அதைத் தூக்கிச் செல்வதுமான காட்சிகள் சமூக ஊடகம் மற்றும் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாது பிரபலங்களும் Punch -ஐ அரவணைப்பது போல ஏஐ புகைப்படங்களை உருவாக்கி இணையத்தில் பதிவிட்டுவருகிறார்கள்.
குரங்கோ, மனிதரோ, எந்த உயிரினமாக இருந்தாலும் தேவைப்படுவதெல்லாம் அன்பும், அரவணைப்பும்தான்..இதுதான் Punch குரங்கு மூலம் வெளிப்படும் நிஜம்

