Trump & Epstein
Trump & EpsteinX

டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சி ஹோட்டலில் திரையிடப்பட்ட டிரம்ப்-எப்ஸ்டீன் வீடியோ!

வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்துக்கு முன்னதாக டிரம்ப்க்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Published on
Summary

வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு முன், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் டிரம்ப் தோன்றும் வீடியோ ஹோட்டல் பக்கச் சுவரில் திரையிடப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தில் கலந்துக் கொண்டார். இந்த இரவு விருந்து வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அதிபர் டிரம்ப் இருக்கும் ஒளிப்படங்கள் திரையிடப்பட்டன. இது சம்பந்தப்பட்ட காணொளியை ஒரு பயனர் X தளத்தில் பதிவிட்டார். எப்ஸ்டீனுடனான டிரம்பின் உறவை எடுத்துக்காட்டும் இந்த வீடியோ , ஹில்டன் ஹோட்டலின் பக்கவாட்டு சுவரில் திரையிடப்பட்டது .

அந்த வீடியோவில் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட, மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் கோப்புகளின் எழுத்துப்படிவங்களும் இருந்தது. இந்த வீடியோ, டிரம்பிற்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மீண்டும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவர திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் செய்தியாளர் இரவு விருந்தில் முதல் முறையாகக் கலந்துகொண்டார். அவர் 2011 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை விருந்தினராக இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார். டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்திலோ அல்லது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டிலோ அந்த இரவு விருந்தில் கலந்துகொள்ளவில்லை.

Trump & Epstein
டிரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச்சூடு.. 6 முறை எழுந்த சத்தம்.. அதிபரை கொல்ல திட்டமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com