gun shoot in white house
gun shoot in white houseweb

டிரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச்சூடு.. 6 முறை எழுந்த சத்தம்.. அதிபரை கொல்ல திட்டமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published on
Summary

வாஷிங்டனில் ஹில்டன் விருந்தினர் அரங்கில் நடைபெற்ற இரவு விருந்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப், மெலனியா, துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தபோது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆறு முறை சுட்டதாக கூறப்படும் சூட்டில், பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய நபர்களை உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினர்.

செய்தியாளர் - விக்னேஷ்

அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது மர்ம நபர் ஒருவரால் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன், பாதுகாப்பு அதிகாரிகள் அதிபர் டிரம்பை உடனடியாக அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

முதற்கட்டத் தகவல்களின்படி, இந்தத் தாக்குதலில் அதிபர் டிரம்பிற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

gun shoot in white house
தன்மானமே முக்கியம்.. உலகுக்கே SHOCK கொடுத்த பாகிஸ்தான்.. கடனைத் திரும்ப செலுத்தியது எப்படி?

என்ன நடந்தது..?

வாஷிங்டனில் உள்ள ஹில்டன் விருந்தினர் அரங்கில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க ஒரு கணம் அங்கிருந்த அனைவரும் மிரண்டனர். ஆறு முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

வாஷிங்டனில் உள்ள ஹில்டன் விருந்தினர் அரங்கில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செய்தியாளர் சந்திப்புக்கு முன் நடைபெற்ற இந்த விருந்தின்போது அனைவரும் அங்கு கீழே அமர்ந்திருக்க, ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா உள்ளிட்ட முக்கியமானவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர்.

gun shoot in white house
நேட்டோவை உடைக்கும் அமெரிக்கா.. முக்கிய நாட்டை வெளியேற்ற திட்டம்.. ஈரான் போர் காரணமா?

அப்போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க ஒரு கணம் அங்கிருந்த அனைவரும் மிரண்டனர். ஆறு முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக சொல்லப்படும் நிலையில் உடனடியாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் டொனால்ட் ட்ரம்பை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்தியவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த அதிபர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவரின் காது பகுதியில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

gun shoot in white house
”ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயார்” - இஸ்ரேல் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com