செய்தியாளர்களின் கணக்குகள் முடக்கம்.. கருத்துக் கணிப்பு நடத்திய எலான் மஸ்க்! ரிசல்ட் என்ன?

செய்தியாளர்களின் கணக்குகள் முடக்கம்.. கருத்துக் கணிப்பு நடத்திய எலான் மஸ்க்! ரிசல்ட் என்ன?
செய்தியாளர்களின் கணக்குகள் முடக்கம்.. கருத்துக் கணிப்பு நடத்திய எலான் மஸ்க்! ரிசல்ட் என்ன?
சிஎன்என், தி வாசிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ்,  இன்டிபென்டன்ட் உள்ள உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களின் சில செய்தியாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், அவர்களின் அக்கவுண்ட்டை திருப்பி தர மக்களிடம் கருத்துக் கணிப்பு கேட்டுள்ளார் எலான் மஸ்க். எதற்காக செய்தியாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது? கருத்துக் கணிப்பில் நடந்தது என்ன? இதற்கு முன்பு ட்ரம்புக்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் நடந்து என்ன விரிவாக பார்க்கலாம்.
முடக்கத்திற்கு காரணம் என்ன?
எலான் மஸ்க்கின் இருப்பிடம் மற்றும் விமானம் தொடர்பான சில தனிப்பட்ட தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட்டதே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. 
பின்னணி என்ன?
எலன் ஜெட் ட்விட்டர் கணக்கை பற்றி முன்பொருமுறை பேசிய எலான் மஸ்க், `ஜெட் விமானத்தைக் கண்காணிப்போர் தன் பயனர்களிடம் சுதந்திரமாக பேச ட்விட்டர் அனுமதிக்கிறது’ என்றெல்லாம் கூறியிருந்தார். ஆனால் இப்போது எலன் ஜெட் அக்கவுண்டின் உரிமையாளர் ஜாக் ஸ்வீனி, மஸ்க் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பின்தொடர்வதைத் தொடங்கியபோது, ட்விட்டர் தனது தனியுரிமை விதிகளை மாற்றியுள்ளது. இந்த விதிகளினால், புதுப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல் கொள்கை பயனர்கள் வேறொருவரின் நேரடி இருப்பிடத்தைப் பகிர்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் ட்விட்டரில் நேரடியாகப் பகிரப்பட்ட தகவல் அல்லது பயண வழிகளின் 3-ம் தரப்பு URL(கள்)க்கான இணைப்புகள் உட்பட, நேரலை இருப்பிடத் தகவலைப் பகிர்வதைத் தடைசெய்வதாகவும் ட்விட்டர் கூறியுள்ளது.

அதன் நீட்சியாகவே தற்போது ட்விட்டர் அதன் தனியுரிமைக் கொள்கைகளை மீறியதற்காக சொல்லி, சில பத்திரிகையாளர்களின் அக்கவுண்ட்களைத் தடை செய்துள்ளதென்றும், பத்திரிகையாளர்களுக்கோ அல்லது வேறு எந்தக் அக்கவுண்டுகளுக்கோ விதிவிலக்கு அளிக்காது என்றும் தி வெர்ஜிடம் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டரில் சொன்னது என்ன?

”இனி யார் ஒருவர் தற்போதைய இருப்பிடம் குறித்து ஏதேனும் இணைப்பைப் பகிர்ந்தால் அவர்களின் அக்கவுண்ட் இடைநிறுத்தப்படும், ஏனெனில் அது ஒருவரின் பாதுகாப்பின் மீறலாகும்” என்று எலன் மஸ்க் நேற்று ட்விட்டரில் கூறியுள்ளார். 
மீண்டும் கருத்துக்கணிப்பு நடத்திய எலான் மஸ்க் 
எலன் மஸ்க் இது போன்று யாரேனும் தற்போதைய இருப்பிடம் குறித்துப் பதிவிட்டால் அந்த அக்கவுண்ட் தற்காலிகமாக 7 நாட்கள் இடைநிறுத்தப்படும் என்று கூறினார். இருப்பினும் மனம் மாறி  இடைநிறுத்தப்பட்ட செய்தியாளர்களின் டிவிட்டர்  அக்கவுண்ட்டை திருப்பி ஒப்படைக்க அவரது  அக்கவுண்ட்டில் கருத்துக்கணிப்பைப் பதிவிட்டார். அதில் 59% தற்போதே திருப்பி தரும்படி முடிவு வந்தது.
அதனால் எலன் மஸ்க் மக்களின் விருப்பத்துக்கு இணங்க இடைநிறுத்தப்பட்ட செய்தியாளர்களின் அக்வுண்டை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்துவிட்டார். அதாவது அவர்கள் பேசிவிட்டார்கள், முடக்கம் தற்போது நீக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு முன் நடந்த கணக்கெடுப்பு - ட்ரம்ப் விவகாரத்தில் நடந்தது என்ன?

ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மீட்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில், ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை மீட்டெடுப்பது குறித்து எலான் மஸ்கே ட்விட்டரில் வாக்கெடுப்பை ஏற்படுத்தியிருந்தார். அதில், ஆம் என்பதற்கு 51.8 சதவிகிதத்தினர், இல்லையென 48.2 சதவிகிதத்தினர் என 1 கோடியே 50 லட்சத்து 85,458 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, “மக்களே பேசிவிட்டார்கள். ட்ரம்ப்பின் கணக்கு மீட்டெடுக்கப்படும். மக்களின் குரலே கடவுளின் குரல் (Vox Populi, Vox Dei)” என லத்தீன் மொழியில் எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டெடுக்கப்பட்டதை அடுத்து, ட்ரம்புக்கு தற்போது வரை 10 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் சேர்ந்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com