பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில் ஈரான் அதிபருடனான தனது பேச்சுவார்த்தை குறித்து பதிவிட்டுள்ளார். அப்பதிவில் மோடி, “இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக மேற்காசியாவில் நிலவும் கடினமான சூழல் குறித்து கருத்துகள் பரிமாறி கொள்ளப்பட்டது. பயங்கரவாதம், வன்முறைகள், மக்களின் உயிரிழப்புகள் கவலையளிப்பதாக இருக்கிறது.
எனவே போர் தீவிரமடைவதை தடுப்பது, தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை உறுதி செய்வது குறித்தும், அமைதியை விரைவில் மீட்டெடுப்பதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடினோம். மேலும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா அனைத்து திறன்களையும் பயன்படுத்தும் என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.
உடனடி போர் நிறுத்தம், தடையை நீக்குதல் மற்றும் காஸாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குதல் போன்ற உலகளாவிய கூட்டு முயற்சிகள் அனைத்தையும் ஈரான் ஆதரிக்கும் என்றார்.
பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவது அனைத்து சுதந்திர நாடுகளையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்” என்றுள்ளார்.