கிழக்கு ஆப்பிரிக்கா | மலாவி | அமைச்சரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற துணை அதிபர் விமானம் மாயம்!

மலாவி நாட்டு துணை அதிபர் சென்ற விமானம் மாயமான நிலையில், அதனை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மலாவி
மலாவி முகநூல்

கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த மலாவி நாட்டு அமைச்சரான ரால்ப் கசம்பரா என்பவர் சில தினங்களுக்கு முன் காலமானார். அவரது இறுதிச் சடங்கு மஸூஸூ நகரில் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் துணை அதிபர் செளலோஸ் சிலிமா, தலைநகர் லிலாங்வேயிலிருந்து பாதுகாப்பு படை விமானத்தில் பயணித்துள்ளார்.

மலாவி துணை அதிபர் செளலோஸ் சிலிமா
மலாவி துணை அதிபர் செளலோஸ் சிலிமா

அவருடன் மேலும் 9 பேர் பயணித்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் சென்ற விமானம், ரேடார் கண்காணிப்பிலிருந்து மறைந்து மாயமாகியுள்ளது. இதனையடுத்து விமானத்தை தேடும் பணியில், அந்நாட்டின் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மலாவி
டெஸ்லா குழுவின் தலைவர்! எலான் மஸ்க்கே பாராட்டிய உலகின் கவனம்ஈர்த்த தமிழர்! யார்இந்த அசோக் எல்லுசாமி?

விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை தேடுதல் பணியை நிறுத்தக்கூடாது என அவர்களுக்கு, அந்நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com