\
Pentagon: Around 100 US Soldiers Injured by Iran
ஷான் பார்னெல்X

வளைகுடா போர்.. 2 வாரங்களில் 100 ராணுவ வீரர்கள் காயம்.. ஒப்புக் கொண்ட அமெரிக்கா!!

ஈரான் தாக்குதலில் கடந்த 2 வாரங்களில் 100 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதை அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
Published on

மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜூலை 7-ம் தேதி ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அங்கு போர் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களாக அமெரிக்காவின் ஏவுகணைகள் ஈரானின் பாந்தர் அப்பாஸ், குவாசம் தீவு, சாம்பஹார், கொனர்க், சிரிக் போன்ற துறைமுக நகரங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில்  பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்பிலும் கடுமையான தாக்குதல் நடைபெறுவது, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஈரான் - அமெரிக்கா
ஈரான் - அமெரிக்காPt web

இந்தசூழலில் தான், ஈரானின் தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்க அரசு மறைப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் குற்றச்சாட்டியிருந்தது.

இதையடுத்து, ஈரான் தாக்குதலில் கடந்த 2 வாரங்களில் 100 ராணுவ வீரர்கள் காயமடைந்திருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் ஒப்புக்கொண்டுள்ளது.

இதுகுறித்து, பெண்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் கூறுகையில், ஜூலை 17-ம் தேதிக்குப் பிறகு ஈரான் தாக்குதலில் 100 ராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கின்றனர். பெரும்பாலும் அவர்களுக்கு லேசான காயங்களே இருந்தன. தற்போது, 96% பேர் குணமடைந்திருக்கின்றனர். வீரர்களின் நலன் கருதி வேண்டுமென்றே இத்தகவலை வெளியிடாமல் தாமதப்படுத்தினோம் எனத் தெரிவித்திருக்கிறார்.

எனினும், போரில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வ விவரங்களை வெளியிடவில்லை.

Pentagon: Around 100 US Soldiers Injured by Iran
இலக்கு மாறாத குறி.. அமெரிக்க ராணுவ வீரரைக் காலி செய்த ஈரான்.. அதிகரிக்கும் பதற்றம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com