3 நாட்கள் மீதமிருக்கையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைக்கப்பட்டது ஏன்?- பின்னணி இதுதான்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் 3 நாட்கள் மீதமிருந்த நிலையில், முன்கூட்டியே கலைக்கப்பட்டிருப்பது அந்நாட்டில் எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷெபாஸ் ஷெரீப்
ஷெபாஸ் ஷெரீப்twitter

பிரதமராகப் பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப்

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற இம்ரான் கான் ஆட்சியில், அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து முக்கியக் கட்சி ஒன்று விலகியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் இம்ரான் கான் பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். பின்னர், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்றார்.

இதையும் படிங்க: சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்: டெல்லியின் முக்கியப் பகுதிகளில் 144 தடை!

சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கான்

அதேநேரத்தில் இம்ரான் கான் பதவி இழப்புக்குப் பிறகு அவர்மீது ஊழல், மோசடி, கொலை, பயங்கரவாதம், தேசத் துரோகம் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், உலகத் தலைவா்களிடம் இருந்து ரூ.14 கோடி மதிப்பிலான 58 நினைவு மற்றும் பரிசுப் பொருள்களைப் பெற்று விற்றதில் மிகப்பெரிய ஊழல் செய்ததாகவும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இம்ரான் கான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், அவர் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அவா் உடனடியாக கைது செய்யப்பட்ட அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக அட்டோக் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 3 மாதங்களில் இம்ரான் கைது செய்யப்படுவது, இது 2வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெபாஸ் ஷெரீப்
சிறையில் இம்ரான் கான்: முதல் கைதுக்கு இருந்த ஆர்ப்பாட்டங்கள் இப்போது இல்லையே ஏன்? பாக். நிலைமை என்ன?

பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு

இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று இரவு (ஆகஸ்ட் 9) கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரகடனத்தைப் பாகிஸ்தான் அதிபர் பிறப்பித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய காபந்து அரசில் நிர்வாகத்தை மேற்கொள்வது யார் என்பதை ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இணைந்து முடிவு செய்ய உள்ளனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க: 11 சிக்ஸர், 28 பவுண்டரிகள், 244 ரன்கள்; இங்கிலாந்தில் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்!

முன்கூட்டியே கலைக்கப்பெற்றது ஏன்?

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்து 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் நாடாளுமன்றம் பதவிக்காலம் முடியும் முன்னரே, அதனைக் கலைத்தால் 90 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். கூடுதலாக, 30 நாட்கள் கிடைக்கும் என்பதாலேயே பிரதமர் நாடாளுமன்றத்தை முன் கூட்டியே கலைக்க பரிந்துரைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. எனினும், புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதிகளை மறு வரையறை செய்ய வேண்டிய பணிகள் இருப்பதால் தேர்தல் இன்னும் பல மாதங்கள் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. தவிர, பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் செலவினங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளை செய்ய கூடுதல் காலத்தைப் பெறும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'flying kiss' சர்ச்சையில் ராகுல்; பாஜக பெண் எம்பிக்களின் புகாரும் காங். தலைவர்களின் எதிர்வினையும்!

இம்ரான் கான் கட்சியினர் குற்றச்சாட்டு

மேலும், ’நீதிமன்றத் தீர்ப்பின்படி இம்ரான் கான் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இதைக் கருத்தில்கொண்டுதான், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஷெபாஸ் ஷெரீப் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளார். அதாவது, இம்ரான் இல்லாத தேர்தல் களத்தை எளிதாகச் சந்திக்கலாம் என ஷெபாஸ் கணக்குப் போடுகிறார்’ என்று இம்ரான் கான் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள், ”பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு ஷெபாஸ் ஷெரீப் மீது காரணம் சொல்லப்படுகிறது. அதை மறைப்பதற்கு இம்ரான் கான் வழக்குகளைக் கையில் எடுத்து நாட்டைத் திசை திருப்பியுள்ளார். தவிர, அவரைச் சிறையிலும் அடைத்துள்ளார். இது, அரசியல் பழிவாங்கல். ஆக, இவற்றை எல்லாம் மக்கள் மறக்கும்வண்ணம் தேர்தல் தள்ளிச் செல்வதற்கு இன்னும் வாய்ப்புகள் உருவாகலாம்” என்கின்றனர்.

இதையும் படிங்க: ”போருக்கு ஆயத்தமாகுங்கள்” - அதிகாரிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு

பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் பாகிஸ்தான்!

அண்டை நாடான பாகிஸ்தான், கடன், பெட்ரோலிய செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பிரச்னைகளால், கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் மின்சாரம் மற்றும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெபாஸ் ஷெரீப்
மின்சாரத்தை சேமிக்க இவ்வளவு கட்டுப்பாடுகளா!! பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com