\
Pakistani province sindh demands a separate state
Pakistani province sindh demands a separate stateReuters

வார்த்தையை விட்ட ராணுவ தளபதி : தனி நாடு கோரும் பாக். மாகாணம்.. போராட்டக்களமாகும் முக்கிய நகரங்கள்!

பாகிஸ்தானின் ராணுவ தளபதி சொன்ன ஒரு வார்த்தையால் பாகிஸ்தானின் முக்கிய மாகாணம் பிரிவினைவாத கோரிக்கையை முன்வைத்துள்ளது.
Published on: 
Summary

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை இரண்டாகப் பிரிக்கும் ராணுவத் தளபதியின் யோசனை பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. சிந்து தேசியவாதிகள் தனி சிந்துதேஷ் கோரிக்கையை முன்வைத்து முழக்கமிட்டுள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாகாணங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டன. ஆனால் சிந்து மாகாணம் முழுவதுமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் ஒரு பகுதியாக சிந்து மாகாணம் மாறிய பின்னர் அந்நாட்டின் மத்திய அரசு உருது மொழியை சிந்து மாகாணத்தில் தொடர்ந்து திணித்து வருகிறது.

பாகிஸ்தான் மத்திய அரசின் இந்த செயல் தங்கள் சொந்த மொழியான சிந்தி மொழியை அளிக்கும் முயற்சி என சிந்து மாகாணத்தை சேர்ந்த தேசியவாதிகள் தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில் சமீபத்தில் பாகிஸ்தானின் முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற அசிம் முனீர் சிந்து மாகாணத்தை இரண்டாக பிரிக்கும் யோசனையை முன்வைத்தார்.

asim munir
asim munirReuters

மேலும் பாகிஸ்தானின் பொருளாதார மையமான கராச்சியைச் சிந்து மாகாணத்திலிருந்து பிரிக்கும் வகையிலான கருத்துக்களையும் பொதுவெளியில் பேசினார். இது சிந்து மாகாணத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிந்து தேசியவாதக் கட்சிகளின் கூட்டமைப்பான ஜீயே சிந்து ரஹ்பர் கமிட்டி (JSRC) உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கானோர் கராச்சியில் பேரணி நடத்தியுள்ளனர்.

மேலும் சிந்து பகுதியில் உள்ள முக்கிய நகரங்களான ஹைதராபாத், நவாப்ஷா, லர்கானா உள்ளிட்ட பகுதிகளிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சிந்து தேசியவாத அமைப்புகள் சிந்து பகுதி பாகிஸ்தான் அல்ல, எங்களுக்கு தனி 'சிந்துதேஷ்' (Sindhudesh) வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிந்து மாகாணத்தைப் பிரிக்கும் முயற்சி கராச்சி மற்றும் ஹைதராபாத் வீதிகளில் இரத்தக் களரியை ஏற்படுத்தக்கூடும் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் நீண்ட காலமாகவே பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்களே ராணுவத்திலும், ஆட்சியிலும் அதிகாரம் செலுத்தி வரும் நிலையில், பஞ்சாப் மாகாணத்துக்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

Pakistani province sindh demands a separate state
தங்கத்தின் விலை வீழ்ச்சி? அது எப்போது பழைய மதிப்பை எட்டும்: தங்கம் வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க!