பாகிஸ்தான்|டிக்டாக் கணக்கை நீக்க மறுத்த 16 வயது சிறுமி.. தந்தை செய்த கொடூரம்!
பாகிஸ்தான் ராவல்பிண்டியில் வசித்து வருபவர், சனா யூசப். இவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார் வயது 16 என்று கூறப்படுகிறது. டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளில் சனா யூசப் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைப் கொண்டிருக்கிறார். அதில்,தனக்குப் பிடித்த கஃபேக்கள், தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் பாரம்பரிய உடைகளின் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்தநிலையில்தான், 9 ஆம் வகுப்பு படிக்கும் அந்த இளம்பெண், பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள ராவல்பிண்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சிகர செய்தி வெளியானது .
முதலில், அந்தச் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் நாடகமாடியுள்ளனர். பின்னர், காவல் துறையின் தீவிர விசாரனையில், டிக்டாக் கணக்கை நீக்க மறுத்ததற்காக தந்தையே தன் மகளை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் அந்தச் சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். AFP உடன் பகிரப்பட்ட காவல்துறை அறிக்கையின்படி, தந்தை செவ்வாய்க்கிழமை தனது 16 வயது மகளை "கௌரவத்திற்காக" கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது .
கடந்த மாதம், லட்சக்கணக்கான பாலோயர்களைக் கொண்ட 16 வயது டிக்டாக் பிரபலமான சனா யூசப் , கௌரவத்திற்காக கொல்லப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.