Pakistan Produce nuclear ballistic missile icbm vs US
model imagex page

புதிய அணு ஏவுகணை தயாரிப்பு? களத்தில் இறங்கிய பாகிஸ்தான்.. அச்சத்தில் உறைந்த அமெரிக்கா!

அமெரிக்காவே ஒரு இஸ்லாமிய நாட்டைக் கண்டு அச்சம் கொண்டுள்ளது. ஆம், இத்தனைக்கும் அமெரிக்காதான் அந்த நாட்டிற்குப் பெரிய அளவில் நிதி அளிப்பதிலும், ராணுவத் தளவாடங்கள் உதவி செய்வதிலும் ஒப்பந்தமிட்டுமிள்ளது.
Published on

பாகிஸ்தான் விரைவில் ஒரு கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்துப் பார்க்க இருப்பதாக, அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கபார்டு அந்நாட்டின் செனட் சபையில் தெரிவித்திருப்பது, இந்தியாவை மட்டுமல்ல, அமெரிக்காவையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. ​​

சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளையே அமெரிக்கா தனக்கு நிகரான அணுசக்தி நாடுகளாகவும் அவைகளையே எதிரிகளாகவும் பார்க்கிறது. அதிலும், தற்போது இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை ஒழித்துக்கட்டும் முடிவில் இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவே ஒரு இஸ்லாமிய நாட்டைக் கண்டு அச்சம் கொண்டுள்ளது. ஆம், இத்தனைக்கும் அமெரிக்காதான் அந்த நாட்டிற்குப் பெரிய அளவில் நிதி அளிப்பதிலும், ராணுவத் தளவாடங்கள் உதவி செய்வதிலும் ஒப்பந்தமிட்டுமிள்ளது.

Pakistan Produce nuclear ballistic missile icbm vs US
pakistanx page

அந்த நாடு வேறு எதுவுமில்லை. நமது பாகிஸ்தான்தான். பாகிஸ்தான் விரைவில் ஒரு கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்துப் பார்க்க இருப்பதாக, அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கபார்டு அந்நாட்டின் செனட் சபையில் தெரிவித்திருப்பது, இந்தியாவை மட்டுமல்ல, அமெரிக்காவையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. ​​இந்த தாக்குதல் மூலம் தனது நாட்டையே பாகிஸ்தான் அதன் எல்லைக்குள் கொண்டுவர முயல்கிறது என்று அமெரிக்கா அஞ்சுகிறது. ஆனாலும், அமெரிக்கா இப்படி எச்சரிப்பது இதுதான் முதல் முறையல்ல.. முந்தைய அமெரிக்க அரசாங்கங்களும் இதுகுறித்து ஏற்கெனவே எச்சரித்துள்ளன.

Pakistan Produce nuclear ballistic missile icbm vs US
பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது ஆப்கான் ட்ரோன் தாக்குதல்.. தாலிபன் பதிலடி!

இருப்பினும், இந்த முறை பாகிஸ்தான் உருவாக்கி வருவதாகத் தோன்றும் புதிய ஏவுகணை அல்லது கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்கா அடையாளம் காட்டவில்லை. ஆனால், அமெரிக்காவின் மதிப்பீட்டின்படி, பாகிஸ்தான் தனது கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மேம்பாட்டிற்கு அடித்தளமாக அமையக்கூடிய பெரிய ராக்கெட் மோட்டார்களை உருவாக்கி வருகிறது. அமெரிக்காவின் இந்த மதிப்பீட்டை, சர்வதேச உத்திசார் ஆய்வுக் கழகத்தால் பகுப்பாய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Pakistan Produce nuclear ballistic missile icbm vs US
Model imagex page

மேலும், நீண்டதூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவதில், இயந்திரக் கட்டுமானத் தொழிலுக்கான பெய்ஜிங் தானியக்க ஆராய்ச்சி நிறுவனம் பாகிஸ்தானுடன் ஒத்துழைத்து வந்ததாக அமெரிக்கா நம்புகிறது. இருப்பினும், தனது அணு மற்றும் ஏவுகணைத் திறன்கள், எதிரிகளைத் தடுப்பதற்கும் பிராந்திய நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவருகிறது. இன்னொரு புறம், பாகிஸ்தான் இதுவரை எந்தவொரு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையையும் நடத்தவில்லை என்றாலும், அந்த ஏவுகணைத் திட்டத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தானிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏற்கெனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pakistan Produce nuclear ballistic missile icbm vs US
வடகொரியாவுக்கு அணு ஆயுதம் வழங்கியது பாகிஸ்தான்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com