பாகிஸ்தான்: 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன்.. யாசகம் பெற்ற நிலையைக் கண்டு அதிர்ந்த தாய்!

பாகிஸ்தானில் 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தன் மகனை, அவரது தாய் தற்போது கண்டுபிடித்துள்ளார்.
model image
model imagefreepik

பாகிஸ்தான் ராவல் பிண்டியில் உள்ள தஹ்லி மோஹ்ரி சௌக் என்ற பகுதியில் முன்னாள் காவலர் ஒருவர் யாசகம் எடுத்துள்ளார். அவருடன் இன்னும் சிலரும் யாசகம் பெற்றுள்ளனர். இந்தச் சூழலில், யாசகம் பெற்ற அந்த முன்னாள் காவலரான முஸ்தகீம், தன் மகன்தான் என்பதை அடையாளம் கண்ட அவரது தாய் ஷாஹீன் அக்தர், ஆனந்தம் அடைந்து அவரை அணுகியுள்ளார்.

model image
model imagefreepik

ஆனால், அவரைச் சுற்றியிருந்த பிற யாசகர்கள் அந்த தாயை அவரிடம் நெருங்கவிடவில்லை. மேலும் அவரைத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அந்த தாயார் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில், மூன்று பெண்கள் உட்பட அந்தக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அந்த தாய் தன் மகனை ஆரத்தழுவிக் கட்டிக்கொண்டார்.

இதையும் படிக்க: பொன்முடி வழக்கு தீர்ப்பு: இதுவரை ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தவர்கள் யார் யார்?-முழு விபரம்

முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டே தன் மகனைக் காணவில்லை என போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட அவருடைய மகன், கடந்த 2016ம் ஆண்டு டைபாய்டு காய்ச்சலால் மாயமானதாகப் புகாரில் கூறியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட அவர், அடிக்கடி காணாமல் போனதாகவும், தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்ட நிலையில்தான் இறுதியாக 2016ஆம் ஆண்டு காணாமல் போனார் என அவரது தாயார் சிவில் லைன்ஸ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

model image
model imagefreepik

தன் மகனைக் கண்டுபிடிக்க தொடர்ந்து போராடியதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார். தன் மகனின் இயலாமையைப் பயன்படுத்தி, இந்த யாசக கும்பல் அவரை யாசகம் பெறவைத்துள்ளது என்றும், இதற்காக அவருக்கு போதை ஊசி போட்டுள்ளனர் என அவரது தாயார் தற்போது தெரிவித்துள்ளார். இதன்பேரில், போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களை வைத்து அந்த மொத்த கும்பலையும் பிடிப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: குடும்பத்திடம் இருந்து வந்த அவசர அழைப்பு: தென்னாப்ரிக்காவிலிருந்து திடீரென மும்பை திரும்பிய கோலி!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com