\
Pakistan launches 6 satellites to watch India
Pak. satellitesCMSA

இந்தியாவை அதிரவிட்ட பாக்.. ரகசியத்தை அறிய விண்ணில் பாய்ந்த 6 செயற்கைக்கோள்கள்! பின்னணியில் சீனா!

விண்வெளி சார்ந்த மற்ற துறைகளில் பாகிஸ்தானைவிட, இந்தியா மேலோங்கியே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published on

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் 6 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. இது, இந்தியாவின் ரகசியங்களை அறியக்கூடியது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்தியா கவலையடைந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்குள் எல்லைப் பிரச்னை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. இதனால், அவ்வப்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில், இந்தியாவைக் கண்காணிக்க பாகிஸ்தான் 6 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருப்பது உலகை அதிரவைத்துள்ளது. வாருங்கள் இதுகுறித்துப் பார்க்கலாம். சீனாவின் ஆதரவுடன் தொடர்ச்சியான செயற்கைக்கோள் ஏவுதல்ககளை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன்மூலம் பாகிஸ்தான் தனது விண்வெளி சார்ந்த கண்காணிப்புத் திறன்களை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.

india, pakistan
india, pakistanx page

அந்த வகையில், கடந்த 16 மாதங்களில், பாகிஸ்தான் ஆறு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இதன்மூலம், இந்தியா முழுவதும் நிகழும் நிகழ்வுகளை அதிக அதிர்வெண்ணுடனும் துல்லியத்துடனும் கண்காணிக்கக்கூடிய, மேலும் திறன்மிக்க ஒரு கண்காணிப்பு செயற்கைக்கோள் குழுமத்தை உருவாக்கியுள்ளதாக வல்லுநர்கள் விவரிக்கின்றனர்.

Pakistan launches 6 satellites to watch India
புதிய அணு ஏவுகணை தயாரிப்பு? களத்தில் இறங்கிய பாகிஸ்தான்.. அச்சத்தில் உறைந்த அமெரிக்கா!

மேலும், பாகிஸ்தானின் விண்வெளித் திட்டத்திற்கு ஒரு வியத்தகு வேகத்தைக் குறிப்பதாகவும் அவர்கள் விவரிக்கின்றனர். அவர்களின் கூற்றுப்படி, இந்தச் செயற்கைக்கோள்கள் ஒன்றிணைந்து, உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை எடுக்க முடியும். தவிர, தரையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க முடியும். மேலும், மறைக்கப்பட்ட அல்லது உருமறைக்கப்பட்ட பொருட்களைக் கண்டறியவும் முடியும்.

Pak. satellites
Pak. satellitesCMSA

மேலும் இராணுவ மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடியும். ஏற்கெனவே, இந்திய விண்மீன் குழுவுடனான வழிசெலுத்தல் (NavIC) திட்டத்தில் இந்தியா சிக்கல்களைச் சந்தித்து வரும் வேளையில் பாகிஸ்தானின் இந்தச் செயற்கைக்கோள் ஏவுதல்கள் இந்தியாவை அச்சமடையச் செய்துள்ளன. தவிர, கவலைகொள்ள வைத்துள்ளது. எனினும், விண்வெளி சார்ந்த மற்ற துறைகளில் பாகிஸ்தானைவிட, இந்தியா மேலோங்கியே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Pakistan launches 6 satellites to watch India
ஆப்கன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இந்தியா..? கொளுத்தி போட்ட பாகிஸ்தான்! மறுத்த ஆப்கன் அரசு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com