\
pakistan imposed emergency in khyber
pakistan imposed emergency in khyberpti

பாகிஸ்தான்| அவசரநிலை பிறப்பித்து.. இம்ரான் கான் கட்சியின் மாகாண ஆட்சி கலைப்பு!

பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சி ஆட்சி நடத்தும் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது.
Published on: 
Summary

பாகிஸ்தான் வடமேற்கு மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, இம்ரான் கான் கட்சியின் ஆட்சி கலைக்கப்பட்டது. திட்டமிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் (Khyber) பக்துன்க்வாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறி அங்கு நெருக்கடிநிலையை பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளது.

அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி பிறப்பித்த இந்த உத்தரவால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி தலைமையிலான மாகாண அரசு உடனடியாகக் கலைக்கப்பட்டுள்ளது.

pakistan former pm Imran Khan Sons fear for father health
இம்ரான் கான்முகநூல்

இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி மாகாண முதலமைச்சரின் தலைமையில் போராட்டம் தீவிரமடைந்து வந்த சூழலில், பாகிஸ்தான் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது அங்கு மீண்டும் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

pakistan imposed emergency in khyber
பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு! ஆளும் அரசு கலைப்பு! அவசர நிலை அறிவிப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com