\
shehbaz sharif
shehbaz sharifReuters

பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு! ஆளும் அரசு கலைப்பு! அவசர நிலை அறிவிப்பு!

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கடுமையான அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், மாகாண அரசு கலைக்கப்பட்டுள்ளது.
Published on: 
Summary

பாகிஸ்தானில் மத்திய அரசு கைபர் பக்துன்க்வா மாகாண ஆட்சியை கலைத்து, அவசர நிலையை அறிவித்துள்ளது. இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி இதை கடுமையாக கண்டித்து, ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையாக குற்றம்சாட்டியுள்ளது. மாகாண அரசின் செயல்பாடுகள் பயங்கரவாதத்தை எதிர்க்கவில்லை என மத்திய அரசு கூறுகிறது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

பாகிஸ்தானின் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இருந்து வந்தார். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததையடுத்து, அவரது ஆட்சி கலைக்கப்பட்டு, பதவி பறிக்கப்பட்டது. மேலும், பல்வேறு ஊழல் புகாரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது, பாகிஸ்தான் முஸ்லீக் லீக் - நவாஸ் கட்சியின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும், ஷெபாஸ் ஷெரீப் தான், பிரதமராக பதவி வகித்து வருகிறார். ஆனால், தற்போதைய மத்திய அரசு திருடப்பட்ட தேர்தல்கள் மூலம் அதிகாரத்திற்கு வந்தது என்று, இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

மேலும், இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி, நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை நடத்தப்போவதாகவும், அந்த கட்சி கூறி வந்தது. இந்நிலையில், பி.டி.ஐ கட்சி ஆட்சி நடத்தி வரும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், ஆட்சிக் கலைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், அந்த மாகாணத்தில் அவசர நிலையையும் பிரகடனம் செய்துள்ளது.

Imran Khan
Imran KhanReuters

நாட்டின் அரசியலமைப்பின் 232 மற்றும் 234-வது பிரிவுகளின் கீழ் மத்திய அமைச்சரவை வழங்கிய பரிந்துரைகளுக்கு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் காரணமாக, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசர நிலை மற்றும் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, முதல்வர் சொஹைல் அப்ரிடியின் பிடிஐ அரசாங்கமும் கலைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கைபர் பக்துன்க்வா மாகாண அரசு வேண்டுமென்றே பின்வாங்குவதாகக் குற்றம் சாட்டினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றும், ஷாபாஸ் ஷெரீப் அரசின் மாபெரும் அரசியல் தவறு என்றும் அக்கட்சி வர்ணித்துள்ளது.

shehbaz sharif
மாகாணங்களைப் பிரிக்க முயற்சி? பாகிஸ்தானின் அதிகார விளையாட்டு.. அசிம் முனீர் திட்டம் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com