\
Pak Spy Drone Destroyed by Indian Army Near LoC in Jammu
TroneX

'அடுத்த அடி மரண அடி தான்' எச்சரிக்கை விடுத்த இந்திய ராணுவம்.. பதுங்கி கொண்ட பாக்.ராணுவம்..?

இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் இல்லையென்றால் அவ்வளவு தான் என" பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.. திடீரென எச்சரிக்கை விடுக்க என்ன காரணம்.. பார்க்கலாம்!
Published on

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. இதெற்கெல்லாம் இந்திய ராணுவம் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. அதே சமயம் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பையும் இந்தியா பலப்படுத்தி வைத்துள்ளது. எல்லைப்பகுதிகளில் இந்திய ராணுவம் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, பாகிஸ்தான் ராணுவம் ஜம்முவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

Indian Army (Model Image)
Indian Army (Model Image)PTI

இந்த நிலையில் இந்திய ராணுவம் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜம்முவின் கூர் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. சற்றும் யோசிக்காத இந்திய ராணுவத்தினர் டிரோனை சுட்டு வீழ்த்தியுள்ளனர்..இந்த தாக்குதலில் டிரோன் சுக்குநூறாக சிதறியது. டிரோனில் இருந்து மெமரி கார்டு மீட்கப்பட்டது.

பின்னர் அந்த மெமரி கார்டை ரெகவரி செய்து பார்த்த போது, அதில் இந்திய ராணுவம் முகாமிட்டிருந்த பகுதிகளை சுற்றி எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் பதிவாகியிருந்தன..

Pak Spy Drone Destroyed by Indian Army Near LoC in Jammu
மொரோக்கோவிலிருந்து படையெடுத்த மக்கள்.. கடலில் மூழ்கி 34 பேர் உயிரிழந்த சோகம்!! காரணம் என்ன?

இந்த டிரோன் சீன தயாரிப்பாக இருக்கலாம் என்றும் இந்திய ராணுவத்தினரின் நடமாட்டத்தை உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்..

இந்த டிரோனை இயக்கியது யார்.. எங்கிருந்து வந்தது என்பது குறித்து தீவிர விசாரணையில் இந்திய ராணுவம் களமிறங்கியுள்ளது.. அதே சமயம் எல்லை கட்டுப்பாடு பகுதிகளில் மேலும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்த பட்டுள்ளன..இந்திய வான் எல்லைப் பகுதிகளில் உளவு பார்க்கும் பணியயை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ளாவிட்டால் பதிலடி கடுமையாக இருக்கும் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது..

Pak Spy Drone Destroyed by Indian Army Near LoC in Jammu
அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்? ஈரான் எரிசக்தி மையங்களுக்கு குறி.. அதிகரிக்கும் போர் பதற்றம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com