லண்டன் தெருக்களில் பான் மசாலா கறை.. இந்தியர்கள் காரணமா? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோக்கள்!
இங்கிலாந்தின் லண்டன் தெருக்களில் குப்பைத் தொட்டிகள், தூண்கள் மற்றும் மரங்கள் இருக்கும் பகுதிகளெல்லாம் கருஞ்சிவப்பு வண்ணம் பூசியது போல, பான் மசாலா எச்சில் கறையோடு தோற்றமளிக்கும் வீடியோ இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பலரும் வெளிநாடுகளில் இருந்து குடியேறிய மக்களைகுற்றஞ்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக வட இந்தியர்களிடையே குட்கா பயன்படுத்தும் பழக்கம் பரவலாக காணப்படுவதால், இதுபோன்ற செயல்களுக்கு இந்தியர்கள்தான் காரணம் என பலரும் விமர்சிக்கின்றனர். இதனிடையே, குட்காவுக்கு எதிராக, தவறான பேக்கேஜிங் மற்றும் சுகாதாரத் துறை எச்சரிக்கைகளுக்கு இணங்காத தயாரிப்பு எனக்கூறி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர் ரேனர்ஸ் லேன் பகுதி அதிகாரிகள்.. மேலும் குட்கா விற்பனை செய்யும் 6 கடைகளை கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர்.
அதேநேரத்தில், பான் மசாலா கறைகள் நகரத்திற்குப் புதிதல்ல என்றும் பயனர்கள் பதிவிட்டுள்ளனர். “2005 ஆம் ஆண்டே, லண்டனின் வெம்பிளிக்குச் சென்றபோது எல்லா ரயில் படிக்கட்டுகளிலும், பல இடங்களிலும் பான்/குட்கா எச்சில் கறைகளைக் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஹாரோ ஆன்லைன் தகவலின்படி, இங்கிலாந்தில் மெல்லும் புகையிலை விற்பனையைத் தடைசெய்யும் சட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், சில்லறை விற்பனையாளர்கள் HMRC (ஹிஸ் மெஜஸ்டிஸ் வருவாய் மற்றும் சுங்கம்)இல் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் சேமிப்பு மற்றும் விற்பனையில் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.