frog
frogweb

தன் உடலையே உணவாக மாற்றும் உயிரினங்கள்.. ஆய்வில் தெரியவந்த சுவாரஸ்யம்!

சில உயிரினங்கள் தங்கள் சொந்த உடலின் பாகங்களை உட்கொள்கின்றன என்று தகவலை ஆய்வின் மூலம் கண்டும்பிடித்துள்ளனர். பெரும்பாலும் ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்ய, ஆற்றலைச் சேமிக்க சில விலங்கினங்கள் இவ்வாறு செய்கின்றன .
Published on
Summary

சில உயிரினங்கள் தங்கள் உடல் பாகங்களை உணவாக மாற்றும் தன்மையை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஆக்டோபஸ், பாம்பு, சிலந்தி, பல்லி போன்றவை தங்கள் உடலின் பகுதிகளை கடிக்கவோ, துண்டிக்கவோ, சாப்பிடவோ செய்கின்றன. இது மன அழுத்தம், வெப்பம், பசி போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

விலங்குலகில் உயிர்வாழ்வதற்காகவோ அல்லது வளர்ச்சியின் ஒரு கட்டமாகவோ சில உயிரினங்கள் தங்கள் உடல் பாகங்களையே உட்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1.ஆக்டோபஸ்

ஆக்டோபஸ்கள் சில நேரங்களில் சிறை பிடிக்கப்பட்டிருக்கும்போது, ​​அவை கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி தங்கள் கைகளைக் கடிக்கவோ அல்லது துண்டிக்கவோ தொடங்குமாம்.

octopus
octopus web
frog
”நான் சாதி என்னவென்று கேட்கவில்லை..” பட்டிமன்ற ராஜா வீடியோ வெளியிட்டு விளக்கம்!

2. பாம்பு

பாம்புகள் சில நேரங்களில் கடும் வெப்பத்தாலோ அல்லது பசியாலோ குழப்பமடைந்து நகரும் தனது சொந்த வாலையே வேறொரு இரை என்று நினைத்து விழுங்கி விடுமாம்.

3. சிலந்தி

சிலவகைச் சிலந்திகளில், பெண் சிலந்தி ஆண் சிலந்தியை இணைசேர்க்கைக்குப் பிறகு உண்டுவிடுமாம், சில நேரங்களில் ,குஞ்சுகள் பொரித்த பிறகு தாய் சிலந்தி தனது உடலையே குஞ்சுகளுக்கு உணவாகத் தந்து மடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

lizard
lizard web
frog
அது என்ன சஞ்சார் சாத்தி? சொல்வதற்கு ஏகப்பட்டவை இருக்கின்றன.. You Need to Know

4. பல்லி

பல்லிகள் தாக்கப்படும்போது வேட்டையாடுபவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப தங்கள் வால்களை துண்டித்துக்கொள்ளுமாம். தப்பித்த பிறகு, அவற்றில் சில பல்லிகள் துண்டிக்கப்பட்ட வாலை சாப்பிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

spider
spider web

தவளைகள் மற்றும் தேரைகள், புரதங்களை மறுசுழற்சி செய்வதற்கும், வாசனைத் தடயங்களை அழிப்பதற்கும் வழக்கமாக தங்கள் தோலை உதிர்த்து சாப்பிடுகிறதாம்.

frog
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு | ’அதிர்ச்சி..’ கொடிமரம் நிறுவியதிலும் திருட்டு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com