ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க புதிய நடடிவக்கை

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் அஜய்' என்ற பெயரில் இந்தியா களமிறங்கியுள்ளது.
Israel Hamas war
Israel Hamas warpt web

இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சகட்டத்தை தொட்டுள்ள நிலையில், இதில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சூழலில், குழந்தைகள் பலரும் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர்.

பாலஸ்தீனத்தை சேர்ந்த குழந்தைகள் படுகாயங்களுடன் சாலைகளில் தஞ்சமடைந்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. தாக்குதலில் இருந்து மீளமுடியாத குழந்தைகள் பலரும் மிகுந்த அச்சத்துடன் நடுங்கியபடி பேசியது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. அவர்களுக்கு பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், உணவு, தண்ணீர் கொடுத்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

Israel Hamas war
அட்டகாசமான கவுண்ட்டர், பிச்சு உதறும் டயலாக் டெலிவரி, கறாரான பாசம்... ஆல் இன் ஆல் அசத்தல் ‘கண்ணம்மா’!

இந்நிலையில் இந்தியர்களை மீட்க முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்களை ஆபரேஷன் அஜய் மூலம் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறப்பு விமானம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு இன்று இரவு செல்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் முதற்கட்டமாக நாளை சிறப்பு விமானம் தாயகம் திரும்பும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேலில் உள்ள 18 ஆயிரம் இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியர்கள் யாரும் இஸ்ரேலில் உயிரிழந்ததாக தகவல் இல்லை என்றும் செவிலியர்கள் ஒருவர் ஹமாஸ் ராணுவ தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com