\
Mojtaba Khamenei & Masoud Pezeshkian
Mojtaba Khamenei & Masoud PezeshkianReuters

”ஒரு குண்டு போட்டால் என்ன நடக்கும் பாருங்கள்” – ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் அதிரடி!!

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் எதிர்பாராத பதிலடி – ஈரான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ள அவர், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Mojtaba & Trump
Mojtaba & Trump ANI

ஈரானின் பாதுகாப்புத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த அக்லாகி, ஞாயிற்றுக்கிழமை புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்பு பாதுகாப்பு அமைச்சராக இருந்த அஜீஸ் நசிர்சாதே, பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் முதல் நாளில் கொல்லப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல மூத்த ராணுவத் தளபதிகளும் கொல்லப்பட்டிருந்ததனர்.

Mojtaba Khamenei & Masoud Pezeshkian
ஒரே நேரத்தில் 1,000 ட்ரோன்கள்.. ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்.. தீப்பிடித்த எண்ணெய் கிடங்குகள்!!

புதிய பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பேசிய அக்லாகி, அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தவறான முடிவுகளை எடுத்தால், ஈரான் எதிர்பாராத மற்றும் விரிவான பதிலடியைக் கொடுக்கும் என்று எச்சரித்தார். மேலும், இந்த மோதலால் ஏற்படும் பிராந்திய மற்றும் உலகளாவிய விளைவுகளுக்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.

ட்ரம்புக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த அவர், மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ட்ரம்ப் சிந்திக்க வேண்டும் என்றார்.

அமெரிக்கா ஒரு குண்டை வீசினால், தனது வீரர்களில் எத்தனை பேரை உயிரற்ற உடல்களாகத் திரும்பக் கொண்டுவர வேண்டியிருக்கும் என்பதை ட்ரம்ப் பார்க்கட்டும்” என்ற பொருளில் அவர் கடுமையாகப் பேசியுள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் பேசுகையில், வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது என்றும் நாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Mojtaba Khamenei & Masoud Pezeshkian
வெள்ளை மாளிகை சாம்பலாகும்.. டிரம்பை அதிரவைத்த ஈரானின் பதிலடி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com