ஈரான் எண்ணெய் கப்பல்
ஈரான் எண்ணெய் கப்பல்web

ஈரான் கண்ணில் மண்ணை தூவி.. கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்த கப்பல்.! சாத்தியமானது எப்படி..?

மத்திய கிழக்கு போருக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணை பாதையை கடந்து இந்தியாவை வந்தடைந்த முதல் எண்ணெய் கப்பல் Shenlong Suezmax எப்படி தடையை கடந்து வந்தது என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
Published on
Summary

Shenlong Suezmax கப்பல், போர்ச் சூழலில் தனது அடையாளங்களை மறைத்து, AIS அமைப்பை Off செய்து, ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வந்தது. இது ஈரானிய ரேடார் மற்றும் ட்ரோன் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க 'நிழல் பயணம்' மேற்கொண்டது.

செய்தியாளர் - விக்னேஷ்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரானும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டதன் விளைவாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

போர் காரணமாக, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் கப்பல் போக்குவரத்துக்கு தடைபட்டு கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், பெரும் போராட்டத்திற்கு மத்தியில் Shenlong Suezmax என்ற கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்புweb

ஹார்மூஸ் நீரிணையை கடந்தபோது டிரோன் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் போன்ற அச்சறுத்தல்களை கடந்து தான் Shenlong Suezmax கப்பல் இந்தியா வந்தடைந்தது.

சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி துறைமுகமான Ras Tanura துறைமுகத்தில் கச்சா எண்ணெயை ஏற்றி பயணத்தை தொடங்கிய இந்த கப்பல், 1 மில்லியன் பேரல்கள், சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் எண்ணெய் கப்பல்
இந்தியாவில் எண்ணெய் தட்டுப்பாடே வராது.. மன்மோகன் சிங்கின் ’Master Stroke’! SPR எனும் பேராயுதம்!

கப்பல் எப்படி தப்பித்தது..?

கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, இந்த கப்பல் மார்ச் 8-ஆம் தேதி ஹார்மூஸ் நீரிணையை கடந்து, இந்தியாவை நோக்கி பயணித்தது. இருப்பினும், பல்வேறு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் போது Shenlong Suezmax கப்பல் மட்டும் எப்படி கடந்தது என்ற கேள்வி எழும்..

இந்தியாவை நோக்கி வந்த Shenlong Suezmax கச்சா எண்ணெய் கப்பல், தனது அடையாளங்களை மறைத்து ரகசியமாக அந்தப் பகுதியைக் கடந்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shenlong Suezmax கப்பல் ஹார்முஸ் நீரிணை அருகில் வந்தபோது தனது AIS எனப்படும் automatic identification system அதாவது 'தானியங்கி அடையாள அமைப்பை' Off செய்துவிட்டு ரகசியப் பயணத்தைத் தொடங்கியது.

ஈரான் எண்ணெய் கப்பல்
கச்சா எண்ணெய் உற்பத்தி |ஆதிக்கம் செலுத்தும் 4 நாடுகள்.. முதலிடத்தில் எது தெரியுமா?
எண்ணெய் டேங்கர்
எண்ணெய் டேங்கர்

ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) ரேடார் மற்றும் ட்ரோன் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவே இந்த 'நிழல் பயணம்' மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இது போன்ற 'நிழல் பயணங்கள்' ஆபத்தானவை என்றாலும், தற்போதைய போர்ச் சூழலில் கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய வேறு வழியில்லை என்று கப்பல் போக்குவரத்துத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Shenlong Suezmax கப்பல் இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றி வந்ததன் மூலம், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

ஈரான் எண்ணெய் கப்பல்
தொடரும் போர் | 3 நிபந்தனைகள் விதித்த ஈரான்.. ஒப்புக்கொள்ளுமா அமெரிக்கா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com