தென்கொரிய பாப் இசை சினிமா பார்த்த சிறுவர்கள்.. கடுமையான தண்டனையை வழங்கிய வடகொரியா!

வடகொரியாவைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர், தென்கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவைப் பார்த்ததற்காக, கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்ட்விட்டர்

ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவையும் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றையும் தினந்தோறும் அச்சத்தில் ஆழ்த்திவரும் நாடு, வடகொரியா. சமீபத்தில்கூட, நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்ததில் வெற்றிபெற்றதாகச் செய்திகள் வெளியாகின. இப்படி, ஏவுகணைகளை அடிக்கடி சோதனை நடத்தி வரும் வடகொரியா, உலகின் மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்கோப்புப் படம்

இதில் வடகொரியா நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்று சொல்லப்படுவதும் உண்டு. அதிலும் அண்டை நாடான தென்கொரியாவின் நாடகம் மற்றும் இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளைக் வடகொரியா மக்கள் கண்டுகளித்தாலும் பெருங்குற்றமாகக் கருதப்படுகிறது.

இதையும் படிக்க: ராமர் கோயில் பிரதிஷ்டை: கர்நாடக பாஜக எம்.பியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.. வைரல் வீடியோ!

இந்த நிலையில்தான், தென்கொரிய பாப் இசை சினிமாவை கண்டுகளித்த 16 வயதான இரண்டு சிறுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தென்கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவைப் பார்த்த 2 பள்ளி சிறுவர்கள் பார்த்ததாகத் தெரிகிறது. இந்த விஷயம் அறிந்த வடகொரியா அரசு, அந்தச் சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக வடகொரியாவில் இருந்து வெளியேறி டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியராக இருக்கும் முனைவர் சோய் க்யோங் ஹுய், "தென்கொரியா சம்பந்தப்பட்ட சினிமாவைப் பார்த்த இரண்டு சிறுவர்களுக்கு வடகொரியா அரசு 12 வருடங்கள் கடும் வேலை செய்யும் தண்டனையை வழங்கியுள்ளது. இதுபோன்ற கடுமையான தண்டனையை கொடுத்ததன்மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கும் அந்நாட்டு அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது. தென்கொரியாவின் கலாசாரங்கள் தங்கள் நாட்டில் ஊடுருவுவதைத் தடுப்பதற்காகத்தான் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இத்தகைய தண்டனைகளை அமல்படுத்துகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்திய விமானத்திற்கு அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர்.. உயிருக்குப் போராடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com