\
North Korea's Kim Jong Un Death Rumors Dispelled
கிம் ஜாங் உன்Reuters

கிம் ஜாங் உன் ம*ரணமா? பரவும் தகவல்!! ஆனால் இது முதன்முறையா?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கும், முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டுள்ளது.
Published on: 

வடகொரியா என்றாலே மர்மம் தான். இதனால், அந்நாடு குறித்தான தகவல்கள் பருக்கும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. இந்தச்சூழலில் தான், 42 வயதான அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், மூளையில் ஏற்பட்ட கடுமையான ரத்தக்கசிவு காரணமாக கோமா நிலைக்குச் சென்றதாகவும், பின்னர் அவசர சிகிச்சைக்காக சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் சிலர் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்Reuters

குறிப்பாக, அமெரிக்காவில் வசிக்கும் சீனாவைச் சேர்ந்த அரசியல் ஆர்வலர் வான்ஜுன் ஷியே இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வடகொரியாவில் அரசியல் அதிகார மாற்றம் ஏற்படலாம் என்ற அச்சத்தில், சீனா தனது 9,000 வீரர்களை வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கிற்கு அனுப்பியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறு, எவ்வித ஆதரங்களும் இல்லாமல் இதுதொடர்பான தகவல்கள் வேகமாக பரவி வந்தன.

North Korea's Kim Jong Un Death Rumors Dispelled
APPLE-ல் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்.. பல சர்ப்ரைஸ் மாடல்கள் இன்று வெளியீடு!

இந்தச் சூழலில், பரவி வரும் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, வடகொரியாவின் அரச ஊடகங்கள் கிம் ஜாங் உன் ஆடை மற்றும் காலணி கண்காட்சியில் பங்கேற்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. அக்டோபர் 19-ஆம் தேதி பியாங்யாங்கில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், அவர் காலணிகள் மற்றும் ஆடைகளைப் பார்வையிடுவதும், அதிகாரிகளுடன் உரையாடுவதும் புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. அவருடன் அவரது மகள் கிம் ஜூ ஏவும் இருந்ததாக புகைப்படங்கள் காட்டுகின்றன.

Kim and his daughter at the expo
Kim and his daughter at the expoKCNA

எனினும், இந்தப் புகைப்படங்கள் மட்டுமே அவர் குறித்து பரவி வரும் தகவல்களை வதந்தி என நிரூபிக்க போதுமானதாக இருக்க முடியாது. அதேசமயம், கிம் ஜாங் உன் மரணம் குறித்து பேசப்படுவது முதல் முறை கிடையாது. ஏற்கெனவே, 2020-ஆம் ஆண்டிலும் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்தும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின. பின்னர் அவர் பொதுவெளியில் தோன்றியதைத் தொடர்ந்து அந்த வதந்திகள் தவறானவை என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

North Korea's Kim Jong Un Death Rumors Dispelled
கடவுளை சந்திக்க வழி..190 குழந்தைகளைக் கொ*ற மதபோதகர்.. கென்யாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com