\
Kenya Cult Leader Guilty in 191 Starvation Deaths
பால் மெக்கன்சிReuters

கடவுளை சந்திக்க வழி..190 குழந்தைகளைக் கொ*ற மதபோதகர்.. கென்யாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கென்யாவில், 'குட் நியூஸ் இன்டர்நேஷனல்' அமைப்பின் மதபோதகர் பால் மெக்கன்சி, உண்ணாவிரதம் மூலம் இயேசுவைச் சந்திக்கலாம் எனக் கூறி 191 பேரை கொன்றார்.
Published on: 

கென்யாவில், இயேசுவைச் சந்திக்க வேண்டும் என்றால் பட்டினி இருக்க வேண்டும் எனக் கூறி, தன்னை பின்பற்றியவர்களில் 190 குழந்தைகள் உள்ளிட்ட 191 பேரை பட்டினி கிடக்கச் செய்து கொலை செய்த வழக்கில் மதபோதகர் பால் மெக்கன்சி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலகை உலுக்கிய இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி குறித்துப் பார்க்கலாம்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில், மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ’குட் நியூஸ் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பின் பாதிரியாராக பால் மெக்கன்சி நெதாங்கே என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் தனது பிரசங்கத்தின் போது, 'உபவாசம் (உண்ணாவிரதம்) இருந்து பிரார்த்தனை செய்பவர்கள்தான் இயேசுவை சந்திக்க முடியும்' என போதனை செய்துள்ளார். இதனை நம்பிய பலர், தங்களது குழந்தைகளுடன் ஷகஹோலா வனப்பகுதிக்குச் சென்று தங்கி உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தது கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது.

பால் மெக்கன்சி
பால் மெக்கன்சிReuters

இதையடுத்து, கென்யா நாட்டு போலீசார், ஷகஹோலா வனப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில், 400க்கும் மேற்பட்ட உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதில், 191 உடல்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், அதில், 190 பேர் குழந்தைகள் என்பது தெரியவந்து உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச்சூழலில் தான், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில், பால் மெக்கன்சியுடன் சேர்த்து மேலும் 28 பேர் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Kenya Cult Leader Guilty in 191 Starvation Deaths
"பாரிஸ் முஸ்லீம் நகராக மாறிவிடும்": டிரம்ப் கருத்தால் சர்ச்சை... பிரான்ஸ் கலவரத்துக்கு காரணம் என்ன ?

குறிப்பாக, இந்த வழக்கில் குழந்தைகளுக்கு உணவு வழங்காமல் தனிமைப்படுத்தியது, அவர்கள் தப்பிச் செல்வதைத் தடுத்தது உள்ளிட்ட செயல்கள் குறித்து நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. குழந்தைகள் முதலில் பட்டினி கிடக்கச் செய்யப்பட்டதாகவும், பின்னர் பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும் அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது.

எனினும், தாம் யாரையும் பட்டினி கிடக்குமாறு கட்டாயப்படுத்தவில்லை என்று பால் மெக்கன்சி குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஆனால், நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்காமல், கொலை வழக்கில் அவரைக் குற்றவாளியாக அறிவித்துள்ளது. பால் மெக்கன்சி மற்றும் அவருடன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் நவம்பர் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Kenya Cult Leader Guilty in 191 Starvation Deaths
சுக்குநூறான அமெரிக்காவின் கனவு: கருத்து கணிப்புகள் கொடுத்த SHOCK.. கனடாவின் முடிவின் பின்னணி என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com