\
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல்
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல்Pt web

100 நாட்களை கடந்து நீடிக்கும் வளைகுடா போர்.. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான்: பாதிப்புகள் என்ன?

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் 100 நாட்களை கடந்தும் தெளிவான வெற்றியாளர் இன்றி நீடிக்கிறது.
Published on

அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர் 100 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், இரு தரப்பிலும் தெளிவான வெற்றியாளர் எவருமின்றி மோதல் தொடர்கிறது. ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இப்போரால் இதுவரை ஈரானில் 3,400க்கும் அதிகமானோரும், லெபனானில் 3,600க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

Iran Conflict
அமெரிக்கா - ஈரான் போர்Pt web

அமெரிக்காவுக்கு ஒட்டுமொத்தப் போர்ச் செலவு ஒரு டிரில்லியன் டாலரை எட்டக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த தற்காலிகப் போர்நிறுத்தம் ஓரளவு நீடித்தாலும், முறையான அமைதி உடன்பாட்டை எட்டுவதில் பெரும் முட்டுக்கட்டை நீடிக்கிறது. குறிப்பாக, ஈரானின் அணு ஆயுத விவகாரத்தில் அந்நாட்டின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமையாகக் கைப்பற்றி அழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது. ஆனால், அமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ள தங்களின் பில்லியன் கணக்கான டாலர் சொத்துகளை விடுவிக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதிக்கிறது.

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல்
காமெனி டிரம்பை சந்திக்க மாட்டார்.. இந்தியப் பெருங்கடல் வரை போர் பரவும் - ஈரான் எச்சரிக்கை!

மேலும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களும், ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலும் இப்பேச்சுவார்த்தையைப் பெரிதும் முடக்கியுள்ளன. இந்த மோதலில் இந்தியா தூதரக ரீதியாக நடுநிலை வகித்தாலும், வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு பாதிப்புகளை நேரடியாகச் சந்தித்து வருகிறது. உலக கச்சா எண்ணெய் மற்றும் வர்த்தகப் போக்குவரத்தின் மிக முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 70 சதவீதம் வரை இப்பாதை வழியாகவே நடப்பதால் இது இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இதுதவிர, வளைகுடா நாடுகளில் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வரும் சூழலில், அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களின் மீதான ட்ரோன் தாக்குதல்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன.

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல்
”பிற நாடுகளை விட எல்பிஜி விலை இந்தியாவில் தான் குறைவு” - மத்திய அரசு விளக்கம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com