ஈரான் மீது தாக்குதல்
ஈரான் மீது தாக்குதல்web

ஈரான் பதிலடி| இதுவரை இல்லாத கொடூர தாக்குதல்.. 3 அமெரிக்க வீரர்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத அளவு ஈரான் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலியாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
Published on
Summary

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் நடத்திய தாக்குதலில், ஜெருசலேமுக்கு அருகே 9 பேர் கொல்லப்பட்டனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா மூன்று வீரர்களை இழந்துள்ளது. இது ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் முதல் உயிரிழப்பாகும்.

கடந்த சில வாரங்களாக அமெரிக்கா எந்நேரம் வேண்டுமானாலும் ஈரானை தாக்கும் என்ற நிலையே இருந்தது. அப்படி இந்த போர் ஏற்பட்டால் இரு தரப்புக்கும் அதிக சேதம் ஏற்படும் என்றும், மத்திய கிழக்கு முழுவதும் இருக்கும் அமெரிக்க நிலைகள் தகர்க்கப்படும் என்றும் பல்வேறு நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர்.

ஈரான் உச்ச தலைவர் கமேனி
ஈரான் உச்ச தலைவர் கமேனி

ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு இஸ்ரேல்-அமெரிக்கா இருதரப்பும் சேர்ந்து கூட்டுத்தாக்குதல் நடத்த, போர் தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் ஈரானின் அதி உயர் தலைவர் கமேனி கொல்லப்பட்டார். ஈரான் தலைநகர் தெக்ரான் மீது இஸ்ரேல் விமானப்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தியதில் கமேனி உட்பட 40 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

ஒட்டுமொத்தமாக ஈரானின் அதிகாரம் பெரியளவில் சிதைக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் ஓயமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்து பதில் தாக்குதல் நடத்திவருகிறது.

ஈரான் மீது தாக்குதல்
ஒரே நாளில் வீழ்ந்த ஈரான் தலைவர்.. ஈரான் பலவீனமானது எப்படி..? இஸ்ரேல் போட்ட Sketch!

இஸ்ரேல் மீது ஈரான் கொடூர தாக்குதல்..

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஜெருசலேமுக்கு அருகிலுள்ள பெய்ட் ஷெமேஷ் (Beit Shemesh) நகரில் 9 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் தஞ்சம் புகுந்திருந்த ஒரு வழிபாட்டுத் தலம் முற்றிலும் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். 11 பேர் இன்னும் மாயமாகியுள்ள நிலையில், இதுவே இந்தப் போரில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதலாகும்.

ஈரான் மீது தாக்குதல்
ஈரான் மீது தாக்குதல்

அதேபோல ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள ராணுவ நடவடிக்கையில், மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் பலத்த காயமடைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது ஈரான் உடனான போரில் அமெரிக்கா தரப்பில் பதிவாகும் முதல் உயிரிழப்பாகும். உயிரிழந்த வீரர்களின் விவரங்கள் 24 மணி நேரத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்றும், கள நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல்
ஈரான் | எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை வீச்சு.. 15 இந்திய ஊழியர்கள் நிலை என்ன..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com