எண்ணெய் கப்பல் மற்றும் அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்
எண்ணெய் கப்பல் மற்றும் அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்web

ஈரான் | எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை வீச்சு.. 15 இந்திய ஊழியர்கள் நிலை என்ன..?

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுத்தாக்குதல் நடத்தியதில் ஈரானின் உயர் தலைவர் காமேனி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் பதிலடி தாக்குதலை நிகழ்த்திவருகிறது.
Published on
Summary

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் ஸ்கைலைட் எண்ணெய் கப்பல் பாதிக்கப்பட்டது. 15 இந்தியர்கள் உட்பட 20 ஊழியர்கள் சிக்கித்தவித்தனர். இந்தச் சம்பவம் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதிக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கி, வளைகுடா நாடுகளில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி உடன் 40 உயர் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். அயதுல்லா அலி காமேனியின் மறைவு ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோசமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தசூழலில் ஈரானின் ரானுவ படைகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கியமான இடங்களை குறிவைத்து தாக்கிவருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் ((Strait of Hormuz)) பயணித்த எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்
எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஸ்கைலைட் என்ற எண்ணெய் கப்பல் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இக்கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட 20 ஊழியர்கள் ஓமன் பாதுகாப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தத் தாக்குதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

எண்ணெய் கப்பல் மற்றும் அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்
ஈரான்| மொத்தமாக சிதைந்த அதிகாரம்.. 40 உயர் அதிகாரிகள் கொலை.. இனி என்ன நடக்கும்?

அமெரிக்கா போர்க்கப்பல் மீது தாக்குதல்..

மேலும், அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது மேற்கு ஆசிய பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல் படை விடுத்துள்ள அறிக்கையில், அரபிக்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் மீது, நான்கு அதிநவீன ஏவுகணைகளை வீசித்தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆபரேஷன் எபிக்ஃபியூரி (EPIC FURY) நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் போர்க்கப்பல் சேதங்களை சந்தித்திருப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எண்ணெய் கப்பல் மற்றும் அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்
ஒரே நாளில் வீழ்ந்த ஈரான் தலைவர்.. ஈரான் பலவீனமானது எப்படி..? இஸ்ரேல் போட்ட Sketch!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com