அமெரிக்காவில் கொரோனாவால் மடியும் மக்கள் : பெரிய பள்ளம் தோண்டி புதைக்கப்படும் உடல்கள்

அமெரிக்காவில் கொரோனாவால் மடியும் மக்கள் : பெரிய பள்ளம் தோண்டி புதைக்கப்படும் உடல்கள்
அமெரிக்காவில் கொரோனாவால் மடியும் மக்கள் : பெரிய பள்ளம் தோண்டி புதைக்கப்படும் உடல்கள்

கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல்களை பெரிய பள்ளம் தோண்டி அமெரிக்காவில் புதைத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸால் இதுவரை உலகில் 16 லட்சத்து 19 ஆயிரத்து 51 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 96,966 பேர் இறந்துள்ளனர். அதேசமயம் 3,65,847 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,68,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,697 பேர் உயிரிழந்துள்ளனர். 25,928 சிகிச்சையில் பலன் பெற்று வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கொண்டே செல்வதால், இறந்த உடல்களை புதைக்க இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களின் உடல்களை மொத்தமாகப் புதைப்பதற்கு ஹார்ட் தீவில் குழிகள் தோண்டப்படுகின்றன. ஏராளமான சவப்பெட்டிகளை வைக்கும் வகையில் தோண்டப்படும் அந்தக் குழிகள், ஆதரவற்றவர்கள் மற்றும் அடக்கம் செய்ய வசதியில்லாதவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த 150 ஆண்டுகளாக அடக்கம் செய்யும் இடமாக இருந்து வரும் ஹார்ட் தீவுக்கு, கொரோனா பாதிப்பு காரணமாக நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் உடல்கள் வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். உடல்களைப் புதைக்கும் பணியில் பெரும்பாலும் சிறைக்கைதிகளே ஈடுபடுவார்கள்.

தற்போது அதிக வேலைப்‌பளு காரணமாக, ஒப்பந்தப் பணியாளர்கள் மூலம் உடல்கள் புதைக்கப்படுகின்றன. உலகில் வேறு எந்த நாட்டையும்விட அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு‌ ஏற்பட்டிருக்கும் நியூயார்க் நகரில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துவிட்டன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com