சிங்கப்பூர்
சிங்கப்பூர்முகநூல்

சிங்கப்பூரில் பரவும் புதுவகை கொரோனா! முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவுவதால் அனைவரும் முகக்கவசம் அணிய அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யி குங் அறிவுறுத்தியுள்ளார்.
Published on

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவுவதால் அனைவரும் முகக்கவசம் அணிய அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யி குங் அறிவுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் பரவிவரும் புதிய வகை கொரோனா தொற்றால் 25 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2 முதல் 4 வாரங்களில் இத்தொற்று உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஓங் யி குங் கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர தேவையான ஏற்பாடுகள் செய்யவும் மருத்துவமனைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலவீனமாக உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூர்
அதீத வெப்பம்... கடும் குளிர் மனித மூளையை பாதிக்கும்? மருத்துவ ஆய்வு சொல்வதென்ன?

எனினும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரும் எண்ணம் தற்போது இல்லை என்றும் அவர் கூறினார். தற்போது பரவியுள்ள கொரோனாவிற்கு k.p.1 மற்றும் K.P.2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஓங் யி குங் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com