அதீத வெப்பம்... கடும் குளிர் மனித மூளையை பாதிக்கும்? மருத்துவ ஆய்வு சொல்வதென்ன?

அதீத வெப்பம்... கடும் குளிர்... இவ்விரண்டும் மனித மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
மருத்துவ ஆய்வு
மருத்துவ ஆய்வு முகநூல்

அதீத வெப்பம்... கடும் குளிர்... இவ்விரண்டும் மனித மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தால் உலகெங்கும் குளிர் மற்றும் வெப்பத்தின் வீச்சு அதிகரித்துள்ள நிலையில் அதனால் மூளையிலும் நரம்பியல் ரீதியாகவும் ஏற்படும் தாக்கங்கள் குறித்து இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

மனித உடல் 20 முதல் 26 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்குள்ளும் 20% முதல் 80% ஈரப்பத சூழலுக்குள்ளும் இயல்பாக செயல்படும் வகையில் அமைந்துள்ளது.

மருத்துவ ஆய்வு
சுட்டெரிக்கும் வெயிலில் சுடசுட டீ குடிக்கப்போறீங்களா? அய்யயோ... இதை மட்டும் பண்ணிடாதீங்க!

இந்த வரம்பு மாறும்போது பாதிப்புகளும் மெல்ல அதிகரிக்கின்றன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதீத வெப்பம், அதீத குளிர் காரணமாக மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு பக்கவாதம், மைக்ரேன் தலைவலி, வலிப்பு, ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு ஐரோப்பாவில் வெப்ப அலை வீசியதில் இறப்புகள் 20% அதிகரித்ததையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. நகரங்களில் பசுமை சூழல் அழிந்துவிட்ட நிலையில் வெப்பத்தின் தாக்கம் கூடிக்கொண்டே வருவதாகவும் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com