காஸாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
காஸாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுTwitter

“ஹமாஸ் இயக்கத்தை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும்”- காஸாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு

காஸாவின் சில பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதை உணர்த்தும் விதத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு சென்றார்.
Published on

ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 50 நாட்களை கடந்துள்ளது. இதில் 4 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது அரசின் மூத்த அதிகாரிகள் சிலருடன் காஸாவிற்குள் நேற்று சென்றார்.

காஸாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் தொடங்கியது!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

அங்குள்ள இஸ்ரேலிய வீரர்களிடம் நெதன்யாகு பேசினார். அப்போது அவர், “ஹமாஸ் இயக்கத்தை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும். எனவே ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என்று உறுதியளித்தார்.

காஸாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டதாக பரவிய செய்தி; உயிருடன் வந்து தந்தையை கட்டியணைத்த சிறுமி!

இதன்பின் இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”ஹமாஸை முற்றிலும் வீழ்த்துவது, ஹமாஸ் பிடித்துள்ள பணையக்கைதிகள் அனைவரையும் மீட்பது, காஸா எந்த
விதத்திலும் இனி தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்வது ஆகியவையே இந்த
போரின் இலக்கு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஹமாஸ் இயக்கத்தினர் தாங்கள் பிடித்து
வைத்துள்ள மேலும் 17 பணையக்கைதிகளை நேற்று மாலை
விடுவித்தனர். இதில் 14 பேர் இஸ்ரேல் குடிமக்கள் ஆவர். இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள 4 நாள் போர் நிறுத்த ஒப்பந்தப்படி 50 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும். தங்கள் சிறைகளில் உள்ள 150 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்கும். இதற்கிடையே போர் நிறுத்த காலத்தை மேலும் நீட்டிக்க அமெரிக்காவும் கத்தாரும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com