\
நேபாள வெள்ளம்
நேபாள வெள்ளம்X

நேபாள பெருவெள்ளம்.. உத்தரப் பிரதேசம்.. பிகாருக்கு பாதிப்பா?ஆலோசனையில் அமித்ஷா!!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், எல்லைப் பகுதியில் உள்ள பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

நேபாளம் திபெத் எல்லைப் பகுதியில் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி (Bhote Koshi ஆற்றில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி, வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் மாயமாகியிருக்கும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேபாள வெள்ளம்
நேபாள வெள்ளம்X

இதனிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கு இந்தியாவின் எல்லைப் பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் பாயும் பல ஆறுகளின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் இருந்து வரும் வெள்ளநீர் கோசி, கந்தக் உள்ளிட்ட ஆறுகள் வழியாக இந்திய பகுதிகளை அடையக்கூடும் என்பதால், நிலைமையை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்தச் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் நிலைமை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேபாள வெள்ளம்
கர்நாடகா | 3 தமிழர்கள் என்கவுன்டர்.. பிரேதப் பரிசோதனையில் பகீர் தகவல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com