ஜப்பான்: 1250 ஆண்டுகள் பழமையான ’ஆண்கள் நிர்வாண விழா’ - முதல்முறையாக பங்கேற்ற பெண்கள்! ஆனால்?

ஜப்பானில் கொண்டாடப்படும் ஆண்களின் நிர்வாணத் திருவிழாவில் பெண்களும் பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஜப்பான்
ஜப்பான்முகநூல்

ஜப்பானில் கொண்டாடப்படும் ஆண்களின் நிர்வாணத் திருவிழாவில் பெண்களும் பங்கேற்றுள்ளனர்.

ஜப்பானில் கொண்டாடப்பட்டு வரும் “ ஹட்கா மட்சூரி“ (Hadaka Matsuri) என்றழைக்கப்படும் ஆண்களின் நிர்வாணத் திருவிழா 1250 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. இது ஜப்பானின் ஜச்சி மாகாணத்தின் இனோசாவா நகரில் கொனோமியா வழிபாட்டு தளத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

ஜப்பானியர்களின் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படும் இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர். இதுவரையும் பெண்கள் பங்கேற்றதில்லை. ஆனால் முதன் முதலில் பெண்களும் பங்கேற்க அந்நாட்டு அரவு அனுமதி வழங்கியது. இதுவரையில் பெண்கள் பங்கேற்க எந்த தடையும் இல்லை தான். ஆனால், எல்லா நாடுகளைப் போலவ ஆணாதிக்க சிந்தனை நிலவி வருவதால் பெண்கள் இத்தகைய கோரிக்கையை வைக்கவே இல்லை. தற்போது இதில் மாற்றம் வந்துள்ளது. பெண்கள் கலந்து கொள்ளலாம் என்றுகூறப்பட்டாலும், நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பங்கேற்கும் பெண்கள் ’ஹாப்பி கோட்ஸ்’ என்று அழைக்கப்படும் ஜப்பானியர்களின் பாரம்பரிய உடையை அணிந்து கொள்வர். பின்னர், துணியால் மூடப்பட்ட புல்களை அனைவரும் ஒன்றாக சேர்ந்து தங்களின் கைகளால்தூக்கி கொண்டு கோவில் சன்னிதாணத்திற்கு எடுத்து செல்வர்.

நோக்கம்

இந்த திருவிழாவில் பங்கேற்கும் ஆண்கள் குறைந்தபட்ச ஆடைகளை மட்டுமே அணிவர். 1250 ஆண்டு கால பழமைவாய்ந்த இந்த விழாவின் நோக்கம் தீய குணங்களை விலக்குவது தான். அத்துடன், அதிர்ஷ்டத்தினை அடைவதாகும்.

எப்படி கொண்டாடப்படும்?

இது நிர்வாண திருவிழா என்று பெயரிடப்பட்டிருந்தாலும் ஒரு முழுமுழுக்க சடங்கு ரீதியாக நிகழ்வுதான். அர்ச்சகர், இரண்டு அதிர்ஷ்ட்ட குச்சிகளை கொண்ட 100 கிளை பண்டல்களை தூக்கி வீசுவார். அந்த அதிர்ஷ்ட்ட குச்சியை கண்டுபிடிக்கும் ஆண் யரோ, அவரை தொடுகிறவர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்ட்டம் கிடைக்கும் என்பதுதான் இவர்களின் நம்பிக்கை. மேலும் தீயசக்திகளை விரட்டும் நோக்கிலும் இந்த விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

ஜப்பான்
லாட்டரிச் சீட்டைக் கவ்விய நாய்.. பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

இந்நிலையில், இதில் பங்கேற்ற 59 வயதான எமி தச்சிபானா என்ற பெண் ஒருவர் தெரிவிக்கையில், “பெண்கள் பங்கேற்கலாம் என்று கேள்விப்பட்டேன், எனவே இந்த நகரத்திலும் திருவிழாவிலும் உற்சாகத்தைக் கொண்டுவர நான் பங்கேற்க விரும்பினேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விநோத திருவிழா குறித்த தகவல்கள் இணையதளத்தில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com