சீனா
சீனாட்விட்டர்

லாட்டரிச் சீட்டைக் கவ்விய நாய்.. பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

சீனாவில் செல்லப்பிராணியான நாய் கவ்விய லாட்டரிச் சீட்டுக்கு 139 டாலர் பரிசு கிடைத்துள்ளது.

பொதுவாக அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது கிடைக்கும் என சொல்ல முடியாது. அப்படியான ஒரு அதிர்ஷ்டம்தான் சீனப்பெண் ஒருவருக்கு நடந்துள்ளது. அதுவும் அவர் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மூலமே அதிர்ஷ்டம் அடித்தால், பெருமகிழ்ச்சியில் இருக்கிறார் அந்த சீனப்பெண்.!

தெற்கு சீனாவைச் சேர்ந்தவர் லின் என்ற பெண். இவர் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தன் வளர்ப்புப் பிராணியான நாயுடன் குவாங்டாங் நகருக்கு ஷாப்பிங் செய்யச் சென்றுள்ளார். அப்போது அவருடைய நாய், ​​அவருடைய பிடியில் இருந்து நழுவி, அங்குமிங்கும் ஓடத் தொடங்கியது.

அவரும் அதைத் துரத்திச் சென்றுள்ளார். இறுதியில் அந்த நாய், லாட்டரி கடைக்குள் நுழைந்து லாட்டரிச் சீட்டு ஒன்றைக் கவ்வியுள்ளது. இதையடுத்து அதை வாங்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இறுதியில் அந்த லாட்டரிக்கு 139 டாலர் பரிசு (இந்திய மதிப்பில் ரூ.11,527) விழுந்துள்ளது. இதனால் லின் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர், "நான் மிகவும் ஆச்சரியப்பட்டுதான் போனேன். லாட்டரியில் இதற்குமுன் இவ்வளவு பெரிய தொகையை நான் வென்றதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆசை யாரைத்தான் விட்டுவைத்திருக்கிறது? இதனால் மறுநாள் தன் செல்லப்பிராணியை அழைத்துக்கொண்ட லின், அதே லாட்டரி கடைக்குச் சென்று நாயை வைத்து வேறொரு சீட்டை எடுக்க வைத்துள்ளார். ஆனால் இந்த முறை அவருக்கு வெறும் 4 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 331.74) கிடைத்துள்ளது. எனினும் மீண்டும் அதிர்ஷ்டத்தைத் தேடித் தந்த செல்லப் பிராணிக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளாராம் அப்பெண்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com