பாலியல் வன்கொடுமை செய்து முஸ்லிம் பெண் கவுரவக் கொலை!

பாலியல் வன்கொடுமை செய்து முஸ்லிம் பெண் கவுரவக் கொலை!

பாலியல் வன்கொடுமை செய்து முஸ்லிம் பெண் கவுரவக் கொலை!
Published on

பிரிட்டனில் 19 வயது இந்திய வம்சாவளி இஸ்லாமிய பெண் ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்குட்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் கவுரவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயது இஸ்லாமிய பெண் ஒருவர் மேக்-அப் தொடர்பான படிப்பை கற்றுவருகிறார். இவர் மற்றொரு இஸ்லாமிய வாலிபரை காதலித்து வந்துள்ளார். காதலை வீட்டில் சொன்னபோது பெண்ணின் வீட்டில் ஏற்கவில்லை. காதலர் அரபு நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர் என்பதால் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்தப் பெண்ணையும் இவர் தோழி ஒருத்தியையும் இரண்டு பேர் கடத்தி, சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து இருவரின் கழுத்தையும் அறுத்துள்ளனர். இதில் இந்திய இஸ்லாமிய பெண் பலியானார். மற்றொரு பெண் படுகாயத்துடன் இருந்துள்ளார். அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இக்கொலை தொடர்பாக முஜாகித் அர்ஷித் (33) என்பவரையும் அவருக்கு உதவிய வின்சென்ட் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். நடந்தது கவுரவக் கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com