தாய்லாந்து
தாய்லாந்துமுகநூல்

தாய்லாந்து | முதல் நாளிலேயே திருமணம் செய்துகொண்ட 200-க்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள்!

கடந்த ஆண்டு மார்ச் மாதம், தாய்லாந்து நாடாளுமன்றத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
Published on

தாய்லாந்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், தாய்லாந்து நாடாளுமன்றத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

தாய்லாந்து
"எங்கள் புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டது" டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.. மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

இதன்மூலம், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு முழு சட்டம், நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் பெறமுடியும். இந்த சட்டம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே தலைநகர் பாங்காக்கில் 200க்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் உற்சாகத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

இது தங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்த தன்பாலின ஈர்ப்பாளர்கள், உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் இதனை அங்கீகரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். ஆசியாவில் தைவான், நேபாளம் நாடுகளை தொடர்ந்து தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் மூன்றாவது நாடு என்ற பெருமையை தாய்லாந்து பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com