தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்ற குரங்குகள் திருவிழா...!

தாய்லாந்து நாட்டில் பாரம்பரிய குரங்குகள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தாய்லாந்து நாட்டின் லோப்புரி நகரில் குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் திருவிழா ஆண்டு தோறும் நவம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுவது வழக்கம். குரங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த ஆண்டின் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில், அப்பகுதி மக்கள் குரங்குகளுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து விருந்தாக படைத்தனர்.

அப்போது குரங்குகளுடன் அவர்கள் விளையாடவும் செய்தனர். அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

Thailand Monkey festival
பல்கேரியாவில் கடும் பனிப்பொழிவு - போக்குவரத்து முடக்கம்

2,000-க்கும் மேற்பட்ட குரங்குகள் அப்பகுதியில் ஒரே நேரத்தில் குவிந்து உணவுகளை உண்டு ருசித்தன. அந்நாட்டின் சுற்றலாத் துறையின் வளர்ச்சிக்காகவும் இந்த திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com