மிஸ் இங்கிலாந்து போட்டி : மேக்கப் போடாமல் இறுதி போட்டிக்கு முன்னேறிய அழகி.!

மிஸ் இங்கிலாந்து போட்டி : மேக்கப் போடாமல் இறுதி போட்டிக்கு முன்னேறிய அழகி.!

மிஸ் இங்கிலாந்து போட்டி : மேக்கப் போடாமல் இறுதி போட்டிக்கு முன்னேறிய அழகி.!
Published on

மிஸ் இங்கிலாந்து போட்டியில் பங்கேற்ற அழகி ஒருவர் முதல் முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 'மிஸ் இங்கிலாந்து 2022' அழகிப் போட்டியில், லண்டன் நகரத்தைச் சேர்ந்த 20 வயது மெலிசா ராவ்ஃப், இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கல்லூரியில் அரசியல் படித்து வரும் மாணவியான இவர், ஒப்பனை எதுவும் இல்லாமலேயே மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார்.

மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94 வருட வரலாற்றில், அழகி ஒருவர் முதல் முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அழகி மெலிசா ராவ்ஃப் பேசுகையில், பல பெண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், சமூக அழுத்தம் காரணமாக ஒப்பனை செய்து கொள்கிறார்கள். நமது இயற்கையான தோல் நமக்கு பிடித்திருந்தால் அதை ஒப்பனை என்ற பெயரில் பிறருக்காக மூடி மறைக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com