\
Donald Trump & Masoud Pezeshkian
Donald Trump & Masoud Pezeshkianreuters

மாறும் மத்திய கிழக்கு அரசியல்!ஈரானுடன் கைகோர்க்கும் அமெரிக்க நட்பு நாடு!

மத்திய கிழக்கில் அமைதிக்கான முயற்சியில் ஈரானுடன் ஒமான் இணைப்பு!
Published on: 
Summary

மத்திய கிழக்கில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய ஈரானுடன் ஒத்துழைப்பு அவசியம் என ஓமான் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்பூசைதி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் ஈரான் மீதான கடுமையான கொள்கைகள் பிராந்தியத்தில் நிலையான அமைதியை சீர்குலைக்கின்றன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

செய்திய்தாளர் - M.மீரா

வணிக ஒப்பந்தத்தின் மூலம், அரபு நாடுகளிலேயே அமெரிக்காவுடன் அதிகாரப்பூர்வமாக உறவை ஏற்படுத்திய முதல் நாடு ஒமான் ஆகும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதில் ஒமான் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவின் ராணுவப் பயன்பாட்டிற்காக தனது துறைமுகங்கள் மற்றும் விமான தளங்களை ஒமான் அனுமதித்துள்ளது.

donald trump
donald trumpreuters

இந்நிலையில் ஓமானின் (Oman) வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்பூசைதி (Badr Albusaidi), ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார். கேம்பிரிட்ஜில் உள்ள கிர்டன் கல்லூரியில் (Girton College, Cambridge) அக்டோபர் 26 அன்று உரையாற்றிய அவர், வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பை ஈரானை விடுத்து உறுதி செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானை ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே பல தசாப்தங்களாக சித்தரித்து வரும் வாஷிங்டனின் (அமெரிக்கா) கொள்கை, மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை சீர்குலைத்துள்ளதாக ஓமான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானை ஓரங்கட்டி வளைகுடாவில் நிலையான பாதுகாப்பை உருவாக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஈரான் மீதான ராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் போன்ற கடுமையான அணுகுமுறைகளை அல்பூசைதி விமர்சித்தார். போர் தொடங்குவதற்கு முன்பு வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், ஆனால் அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாட்டால் அது முறிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Abbas Araqchi  & Sayyid Badr bin Hamad Albusaidi)
Abbas Araqchi & Sayyid Badr bin Hamad Albusaidi)reuters

இதற்கிடையே, முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளார். தெஹ்ரானில் சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் முஸ்லிம் நாடுகளிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். நாடுகளுக்கு இடையே அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், பொதுவான நலன்களுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Donald Trump & Masoud Pezeshkian
நடுவானில் Hijack மிரட்டல்! அலறிய பயணிகள்.. விமானத்தை அவசரமாகத் திருப்பிய விமானி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com