mexico refuses usa military flight deporting migrants
அகதிகள்எக்ஸ் தளம்

முற்றும் மோதல்: அகதிகளை அழைத்துவந்த அமெரிக்கா விமானம்.. அனுமதி மறுத்த மெக்சிகோ!

சட்டவிரோதமாக குடியேறிய அகதிகளை அழைத்து வந்த அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க மெக்சிகோ அரசு அனுமதி மறுத்தது சர்ச்சையாகி உள்ளது.
Published on

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையும் ஒன்று. அதாவது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளார்.

mexico refuses usa military flight deporting migrants
அகதிகள்ராய்ட்டர்ஸ்

அதன்படி, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளார். மெக்சிகோ எல்லை வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்க எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் விரைவில் இங்கு, தடுப்புச் சுவர் அமைக்கப்பட இருக்கிறது.

mexico refuses usa military flight deporting migrants
அதிரடியில் இறங்கிய ட்ரம்ப் நிர்வாகம்.. சட்டவிரோதமாக நுழைந்த 500க்கும் மேற்பட்டோர் கைது!

இந்த நிலையில், சட்டவிரோதமாக அங்கு குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 80 அகதிகள் அமெரிக்காவின் ராணுவ விமானம் மூலம் மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் அகதிகளை அழைத்து வந்த விமானம் தரையிறங்க மெக்சிகோ அரசு அனுமதி மறுத்தது. இதனால் அவர்கள் கவுதமாலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அகதிகள் விவகாரத்தில் மெக்சிகோ- அமெரிக்கா இடையே ஏற்கனவே மோதல் நிலவி வரும் சூழலில், இது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com