\
Mark Zuckerberg
Mark Zuckerbergfacebook - Mark Zuckerberg

AI-யை ஜனநாயகமாக்கும் Mark Zuckerberg.. பெருநிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு செக்!

தனிநபர் கணினிகளில் இயங்கக்கூடிய 'Muse Glimmer' எனும் AI மாதிரியை மெட்டா (Meta) அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

செயற்கை நுண்ணறிவு (AI) மீதான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதற்கு எதிராக ஜுக்கர்பெர்க் பேசியுள்ளார். அதீத நுண்ணறிவு (superintelligence) என்பது மையப்படுத்தப்படாமல் 'பரவலாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர் - M. மீரா

மெட்டா ஒரு புதிய, தரவிறக்கம் செய்யக்கூடிய AI மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு தனிப்பட்ட கணினியில் இயங்கக்கூடியது, ஏஐ சக்திகள் ஒரு சில நிறுவனங்களின் கைகளில் மட்டுமே முடங்கிவிடாமல், தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் கைகளுக்கும் சென்று சேரவேண்டும் என்ற நோக்கில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அதிக சக்திவாய்ந்த தொழில்நுட்பம் இலவசமாகக் கிடைக்க வேண்டுமா அல்லது கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டுமா என்ற விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது இந்த AI மாதிரி.

Meta AI
Meta AI reuters

Muse Glimmer, சிறிய அளவில் இயங்கக்கூடிய திறன் வாய்ந்த Open-weight AI மாடலாகும். ஒரே கிராபிக்ஸ் கார்டில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இது, AI agents, coding, reasoning மற்றும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உதவுகிறது. தனிப்பட்ட சாதனங்களிலேயே AI செயல்பாடுகளை இயக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் local AI பயன்பாட்டை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயனர்கள் புதிய மியூஸ் க்ளிம்மரை Muse Glimmer பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட கணினிகள் மற்றும் சாதனங்களில் நேரடியாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் மியூஸ் ஸ்பார்க் 1.2 மாடலின் பதிப்பாகும், இது கணினி தேவைகளைக் குறைக்க செயல்திறனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மெட்டா தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இறுக்கமான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்று வாதிடும் OpenAI மற்றும் Anthropic PBC போன்ற நிறுவனங்களின் அணுகுமுறைக்கு மெட்டா சவால் விடுக்கிறது. உள்ளூர் சாதனங்களிலேயே இயக்கக்கூடிய 'Gemma' வகை 'ஓபன்-வெயிட்' (open-weight) மாடல்களை கூகுள் (Google) வழங்குகிறது;

meta AI
meta AI reuters

அதேவேளையில், DeepSeek, Moonshot மற்றும் Alibaba Group Holding Ltd. போன்ற சீன நிறுவனங்களின் குறைந்த விலை 'ஓபன்' மாடல்கள், இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளன.

Mark Zuckerberg
எலான் மஸ்க் சொத்து மதிப்பு.. ஒவ்வொரு நாளும் 8,300 கோடி.. வெளியான அறிக்கை!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com