\
Elon Musk's Net Worth Rose $875 Million Daily
எலான் மஸ்க்X

எலான் மஸ்க் சொத்து மதிப்பு.. ஒவ்வொரு நாளும் 8,300 கோடி.. வெளியான அறிக்கை!!

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு தினமும் சராசரியாக 875 மில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
Published on

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், கடந்த ஓராண்டில் மட்டும் தனது சொத்து மதிப்பை நாளொன்றுக்கு சராசரியாக 875 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஃபோர்ப்ஸின் (Forbes) நிகழ்நேர பில்லியனர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு பெஸ்ட் ப்ரோக்கர்ஸ் (BestBrokers) நிதி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 2025 ஜூலை முதல் 2026 ஜூலை வரையிலான ஓராண்டில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சுமார் 320 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது எனவும் இதை, இதை 365 நாட்களாகப் பிரித்துப் பார்த்தால், தினமும் சராசரியாக 875 மில்லியன் டாலர் அளவுக்கு அவரது சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது எனவும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

Elon Musk
Elon MuskReuters

அதேசமயம், எலான் மஸ்க் தினமும் 875 மில்லியன் டாலரை சம்பளமாக பெற்றார் என்று இதற்கு அர்த்தம் கிடையாது. அவரது சொத்து மதிப்பில் பெரும்பகுதி, அவர் வைத்திருக்கும் நிறுவனங்களின் பங்குகள் மற்றும் அவற்றின் சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக, டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) உள்ளிட்ட அவரது நிறுவனங்களின் மதிப்பு உயரும்போது, மஸ்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பும் அதற்கேற்ப அதிகரிக்கிறது.

Elon Musk's Net Worth Rose $875 Million Daily
Interpol தேடும் முன்னாள் தளபதிக்கு உச்ச பதவி.. அமெரிக்கா-இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்?

இதில், ஸ்பேஸ் எக்ஸின் வளர்ச்சி முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்த நிறுவனத்தின் மதிப்பீடு மற்றும் பங்கு மதிப்பு உயர்ந்ததன் மூலம், மஸ்கின் சொத்து மதிப்பும் கணிசமாக அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் மாதத்தில் உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையையும் எலான் மஸ்க் படைத்தார்.

ஆனால், பில்லியனர்களின் சொத்து மதிப்பு என்பது பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. நிறுவனங்களின் பங்கு விலைகள் சரியும்போது, அவர்களின் சொத்து மதிப்பும் வேகமாகக் குறையக்கூடும். அந்த வகையில், சமீபத்திய சந்தை சரிவைத் தொடர்ந்து எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் சுமார் 800 பில்லியன் டாலருக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dell Technologies
Dell TechnologiesReuters

மேலும், பெஸ்ட் ப்ரோக்கர்ஸ் அறிக்கையின்படி, எலான் மஸ்க்கைத் தொடர்ந்து டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மைக்கேல் டெல் 2-ம் இடத்தில் உள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு சுமார் 107.6 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

அதேபோல், செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியால், DeepSeek நிறுவனத்தின் நிறுவனர் லியாங் வென்ஃபெங்கின் (Liang Wenfeng) சொத்து மதிப்பும் வேகமாக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலரில் இருந்து 39.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Elon Musk's Net Worth Rose $875 Million Daily
”விசாரிக்க நேரமில்லாதவர் வர வேண்டாம்..” தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் மாணவர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com