\
Mark Zuckerberg buys Rs 335 crore castle in Ireland
Mark Zuckerbergreuters

அயர்லாந்தின் வரலாற்றுக் கோட்டை.. ரூ.335 கோடிக்கு வாங்கிய மார்க் ஜுக்கர்பெர்க்.. காரணம் என்ன?

மார்க் ஜுக்கர்பெர்க், இதை வாங்குவதற்கு முக்கியக் காரணம், அயர்லாந்தின் டப்ளின் நகரில் மெட்டா நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் அமைந்திருப்பதுதான்.
Published on

மெட்டா (Meta) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் (mark-zuckerberg) அயர்லாந்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையை வாங்கி, உலகைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர், மார்க் ஜுக்கர்பெர்க். இவர், தற்போது அயர்லாந்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாளிகையை வாங்கியிருப்பதுதான் உலகின் பேசுபொருளாகி உள்ளது. அயர்லாந்தின் காவுண்டி வாட்டர்ஃபோர்டு (County Waterford) பகுதியில் அமைந்துள்ள ஸ்ட்ரன்கல்லி கோட்டை (Strancally Castle) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாளிகையை வாங்கியுள்ளார். தனியார் முதலீட்டு நிறுவனத்தின் இணை நிறுவனரான மைக்கேல் அலன்-பக்லியிடமிருந்து மார்க் ஜுக்கபெர்க் இதை வாங்கியுள்ளார். இந்த மாளிகையின் அதிகாரப்பூர்வ விற்பனைத் தொகை வெளியிடப்படவில்லை என்றாலும், இதன் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 224 கோடி முதல் ரூபாய் 335 கோடி (€20 மில்லியன் முதல் €30 மில்லியன் வரை) இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஸ்ட்ரான்கல்லி கோட்டை என்பது யோகலில் இருந்து சுமார் 30 நிமிட பயணத் தொலைவில், பிளாக்வாட்டர் நதிக்கரையில் அமைந்துள்ளது.

Mark Zuckerberg buys Rs 335 crore castle in Ireland
அமெரிக்காவை சீனா வீழ்த்திவிடும்.. கணித்த மார்க் ஜுக்கர்பெர்க்.. அவர் விடுத்த எச்சரிக்கை என்ன?

இது,19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோதிக் பாணி (Gothic Revival style) கோட்டையாகும். இந்தக் கோட்டை, அப்போதைய டோரி நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் கெய்லிக்காக சுமார் 1830இல் கட்டப்பட்டது. இந்த மாளிகை சுமார் 16,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருக்கும் நிலையில், இதனைச் சுற்றி 440 ஏக்கர் நிலப்பரப்பும் அமைந்துள்ளது. மார்க் ஜுக்கர்பெர்க், இதை வாங்குவதற்கு முக்கியக் காரணம், அயர்லாந்தின் டப்ளின் நகரில் மெட்டா நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் அமைந்திருப்பதுதான்.

அவர், அயர்லாந்து வரும் வேளைகளில் தனது குடும்பத்துடன் தங்குவதற்காகவும், இந்த வரலாற்றுப் பழைமை வாய்ந்த மாளிகையைப் பராமரிப்பதற்காகவும் ஜுக்கர்பெர்க் தரப்பில் வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய மாளிகைகளை வாங்குவது மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குப் புதிதல்ல. அறிக்கைகளின்படி, அவர் பாலோ ஆல்டோவில் 11க்கும் மேற்பட்ட சொத்துக்களையும், அத்துடன் புளோரிடா, வாஷிங்டன் டி.சி. மற்றும் ஹவாயிலும் வீடுகளையும் வாங்கி வைத்துள்ளார்.

Mark Zuckerberg buys Rs 335 crore castle in Ireland
ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் பதிவுகளுக்கான தணிக்கை நடைமுறை ரத்து.. மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி அறிவிப்பு
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com