2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு: 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு: 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு: 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

2021-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ல் இயற்பியல் நோபல் பரிசை அமெரிக்காவின் ஆண்ட்ரியா கெஸ், ரோஜர் பென்ரோஸ், ஜெர்மனியின் ரீன்ஹாட் நெஸ் ஆகியோர் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதும் கடந்த ஆண்டை போலவே 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாண்டு விருது பெறும் மூவர் அமெரிக்காவை சேர்ந்த ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியை சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ ஆகியோர் ஆவர்.

இந்த மூவரில் ஸ்கியூரோ, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுத்திருந்தவர். பிறரும் சிக்கலான இயற்பியல் கட்டமைப்புகள் குறித்த விளக்கங்களை அளித்தவர்கள். இக்காரணங்களுக்காகவே இவர்களுக்கு நோபல் பரிசு தரப்படுகிறது. இவர்கள் நோபல் பரிசுக்கு தேர்வாகியிருப்பது தொடர்பான அறிவிப்பை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ராயல் சுவீடிஷ் அகாடமி நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது.

முன்னதாக நேற்றைய தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்விருது டேவிட் ஜூலியஸ், ஆர்டம் படாபவுஷியன் ஆகிய இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com