லண்டன்
லண்டன்முகநூல்

லண்டன்|ISKCON கோயில் உணவகத்தில் KFC பெட்டியோடு வந்த நபர்; இறுதியில் நடந்தது என்ன?

லண்டனில் உள்ள இஸ்கான் கோயில் உணவகத்தில் நுழைந்த நபர் தீடீரென KFC சிக்கன் பெட்டியை திறந்த சாப்பிட்டது மட்டுமல்லாமல், அதனை உணவகத்தின் ஊழியர்களையும் சாப்பிட வேண்டுமா என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

லண்டனில் உள்ள இஸ்கான் கோயிலில் ( ஸ்ரீ கிருஷ்ணா கோயில்) உணவகத்தில் நுழைந்த ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், செய்த செயல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சான்சோ என்று கூறப்படும் அந்த நபர், கோயில் உணவகத்தில் நுழைகிறார். அப்போது அங்கு இருந்த உணவக ஊழியர்களிடம் , “ ஹாய்.. இது வேகன் உணவகமா?, இங்கு அசைவ உணவுகள் எதுவும் கிடைக்காதா? ” என்று கேட்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் ஊழியர்கள், இங்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறினர். உடனே அந்த இளைஞன் பையில் தான் கொண்டு வந்த KFC சிக்கனைத் திறந்து அங்கேயே சாப்பிட ஆரம்பித்தான். இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், இங்கே அசைவ உணவுக்கு அனுமதியில்லை என்று கூறி அவரை உணவகத்தை விட்டு வெளியேறும்படிக் கூறினர்.

ஆனால், அந்த இளைஞன் அங்கு இருந்தவர்களிடம் கோழி வேணுமா? நீங்க கோழி சாப்பிடுவீங்களா? என்று கேட்டார். அங்கிருந்தவர்களில் சிலர் அந்த இளைஞனின் நடத்தைக்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர்.

இறுதியில் நிலைமை மோசமடைந்ததால், செக்யூரிட்டியை அழைத்து உடனடியாக அவரை வெளியேற்றுமாறு கூறினர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில், பலரின் கண்டனத்தையும் பெற்று வருகிறது.

லண்டன்
மகாராஷ்டிரா | மக்களைக் கொடுமைப்படுத்திய போலி சாமியார்!

இதற்கு கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள், இந்து மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்துடன் அந்த நபர் செயல்பட்டுள்ளார் என்றும், இந்து மதத்திற்கு எதிராக வெறுப்பு செயல் இது என்றும் கூறி வருகின்றனர்.

மேலும், சிலர், ’அந்த நபர் இந்த செயலை முன்கூட்டியே திட்டமிட்டு செய்திருக்கிறார்.’ என்று தெரிவித்துள்ளனர். மேலும், அவரை முட்டாள், பைத்தியக்காரன் என்றும் கூறிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com