virgin australia
virgin australiatwitter

ஆஸ்திரேலியா| விமானம் புறப்பட்டதும் நிர்வாணமாக ஓடிய நபர்.. அவசரமாக தரையிறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி!

ஆஸ்திரேலியாவில், விமானத்தில் பயணி ஒருவர் உள்ளே நிர்வாணமாக ஓடியதால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
Published on

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7.20 மணிக்கு விர்ஜின் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் விமானம் ஒன்று, பெர்த்தில் இருந்து மெல்போர்னுக்கு 3.30 மணி நேர பயணமாக புறப்பட்டுள்ளது. அப்போது, விமானம் கிளம்பிய சற்றுநேரத்தில் பயணி ஒருவர் விமானத்தின் உள்ளே நிர்வாணமாக ஓடியுள்ளார். விமானத்தைத் தரையிறக்குமாறுக் கூறிய அவர், விமான பணிப்பெண்ணை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அதேநேரத்தில், இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விமானம் பெர்த்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ”அந்த நபர் விமான நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டார் என்றும், சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிறுவனமும், காவல் துறையினரும் இந்த சம்பவத்திற்கானக் காரணத்தைத் தெரிவிக்கவில்லை. எனினும், இவ்விவகாரம் தொடர்பாக விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இதையும் படிக்க: ஒடிசா| மேடையில் பேசும் நவீன் பட்நாயக்.. நடுங்கும் கையை மறைக்கும் விகே பாண்டியன்.. வைரலாகும் வீடியோ!

virgin australia
”விமானம் புறப்படத் தாமதமாகும்” என்று சொன்ன விமானியைக் கோபத்தில் தாக்கிய பயணி.. வைரல் வீடியோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com