”விமானம் புறப்படத் தாமதமாகும்” என்று சொன்ன விமானியைக் கோபத்தில் தாக்கிய பயணி.. வைரல் வீடியோ!

தாமதமாகும் எனக் கூறியதால் விமானியைப் பயணி ஒருவர் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
pilot attacked
pilot attackedtwitter

தலைநகர் டெல்லி உள்பட வடஇந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், கடும் பனிப்பொழிவால் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், டெல்லியில் இருந்து கோவாவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதம் ஆனது. பல மணி நேரம் விமானம் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதற்கிடையே, விமானம் தாமதமானது குறித்த அறிவிப்பை பயணிகளுக்கு விமானி வெளியிட்டுக்கொண்டு இருந்தார்.

அப்போது விமானத்தின் கடைசி இருக்கையில் இருந்த பயணி ஒருவர் வேகமாக வந்து விமானம் தாமதமாகிவிட்டது எனக் கூறிக்கொண்டு இருந்த விமானியை சரமாரியாக தாக்கினார். இதைப் பார்த்து பயணிகளும் விமான பணியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக விமானியை தாக்கிய பயணி விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார். விமானி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் காவல் துறையில் புகாரளித்துள்ளது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. விமானியை பயணி தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com